முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய்
முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை. சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
0
Leave a Reply