கழுத்தை சுற்றிலும் உள்ள கருமை நீங்க ….
சிலருக்கு முகத்தை காட்டிலும் கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். வெயில், நகை அலர்ஜி, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு கழுத்தில் கருமை உண்டாகும்.
இதற்கு சரியான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். இயற்கை பொருட்கள் கொண்டு எப்படி கருமையை போக்கலாம் .
பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல்லில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்கு கலந்து, கழுத்துப்பகுதியில் ஸ்க்ரப் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்ந்து கெட்டியாக பேஸ்ட் போல கலந்து, கருமையான இடத்தில் நன்கு தடலி காய்ந்தவுடன் தேய்த்து கழுவவும்.பாசிப்பயிறு மாவு உடன் தயிரை கலந்து கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.
0
Leave a Reply