25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


எல்லா வகை சத்துக்களும் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற கொய்யாப்பழம்   .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எல்லா வகை சத்துக்களும் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற கொய்யாப்பழம் .

பழங்கள்தினமும்சாப்பிடவேண்டும்.பழங்களில்ஊட்டச்சத்துக்கள்அதிகமாகஇருக்கும்.குறிப்பாகவைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்து இருக்கின்றன.இயற்கையான சர்க்கரையும் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் பழங்களில் இருக்கின்றன. அதனால் தினசரி உணவில் காய்கறிகளுக்கு இணையாக பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக கொய்யாப்பழம் விளைவிக்கப்படுகிறது. கொய்யா பார்க்க சிறியதாகவும் நன்மைகள் பெரியதாகவும் இருக்கும் ஒரு பழம். மிக எளிமையாகவும் மலிவாகவும் கிடைப்பதாலேயே கொய்யா பழத்தை நாம் பெரிதாக மதிப்பதே இல்லை..

கொய்யா பழத்தில், ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் சி கொய்யாவில் இருக்கிறது.பப்பாளியை விட மூன்று மடங்கு நார்ச்சத்தும் மாதுளையில் உள்ள புரதத்தை விட இரண்டு மடங்கு புரதமும் இதில் இருக்கிறது. அதேபோல வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியமும் இருக்கிறது.அதோடு லைகோபின் என்னும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் தக்காளியை விடவும் 2 மடங்கு அதிகமாக இருக்கிறதுஉடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆப்பிளை அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் அதைவிட அதிகமாக கொய்யாப் பழம் உதவும். கலோரிகளும் குறைவு.100 கிராம் கொய்யாப்பழத்தில் 68 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. நீர்ச்சத்து 81 கிராம் இருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க மிகப்பெரிய அளவில் உதவி செய்யும்.கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து மிக மிக அதிகம். 100 கிராம் கொய்யா பழத்தில் இருந்து மட்டும் கிட்டதட்ட 5.6 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.இந்த நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகிற மலச்சிக்கல் பிரச்சினையைக் குறைக்க முடியும்.

வைட்டமின் சி கொய்யாப் பழத்தில் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரஞ்சு பழத்தைக் காட்டிலும் அதிகம்.100 கிராம் கொய்யாவில் இருந்து 228.3 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி கிடைக்கும். இது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரித்து, நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ- வும் அதிகமாக இருக்கிறது. அதனால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.பெரியவர்களுக்கு வயதாகும் போது வரும் கண்புரை வராமல் தடுக்கும். கண்புரை அறுவை சிகிச்சையே தேவைப்படாது.100 கிராம் கொய்யா பழத்தில் 417 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது. இது வாழைப்பழத்தில் இருப்பதை விடவும் இரண்டு மடங்கு அதிகம்.அதனால் இந்த பொட்டாசியம் நிறைந்த கொய்யாப் பழத்தை தினசரி சாப்பிடுகிறவர்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையே வராது. ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கட்டுக்குள் வரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News