25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சருமத்தை ஜொலிக்க செய்யும் வெள்ளரிக்காய்  டோனர் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சருமத்தை ஜொலிக்க செய்யும் வெள்ளரிக்காய் டோனர் 

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டோனர் பயன்படுத்த வேண்டும். வெள்ளரிக்காய் உதவியுடன் வீட்டிலேயே எளிதாக டோனர் தயாரிக்கலாம்.

வெள்ளரிக்காய்  டோனர் தயார் செய்வது :-முதலில் வெள்ளரிக்காயின் தோலை நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.பின்பு வெள்ளரிக்காய் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் குறைந்த தீயில் வைத்து 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து கொள்ளவும். 

பின்பு இதை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுக்கவும். இந்த சாறை பாட்டிலில் ஊற்றி வைத்து டோனராக பயன்படுத்தலாம். 

தேவைப்பட்டால் இதில் ரோஸ் வாட்டர் மற்றும் விட்ச் ஹசல் சாறையும் சேர்த்து பயன்படுத்தலாம். முகத்திற்கு பல நன்மைகளை வழங்கும் வெள்ளரிக்காய் டோனர் தயார். 

எப்படி பயன்படுத்துவது- முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இப்போது வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை முகத்தில் தடவவும். இதை பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

குறிப்பு: வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை 2-3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News