தினை பக்கோடா.
தேவையான பொருட்கள் -
100கிராம் தினை மாவு,50கிராம் கடலை மாவு, 25கிராம் அரிசி மாவு,4பெரிய வெங்காயம்,2பச்சை மிளகாய்,1துண்டு இஞ்சி, கருவேப்பில்லை, ஆயில்.
செய்முறை –
தினையை மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் 3கொத்து கருவேப்பிலை, நீள்வாக்கில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கையால்உதிர்த்து விடவும்.
அடுத்து நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும். அதில் தினை மாவு, கடலை மாவு , அரிசி மாவு, உப்பு சேர்க்கவும்.பிறகு நன்கு
மிக்ஸ் பண்ணவும்.
அதில் 3ஸ்பூன் நன்கு காய்ச்சிய ஆயில் சேர்த்து, ஸ்பூனால் மிக்ஸ் பண்ணவும். அதில்சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..
ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி சூடானதும், பக்கோடா போல் கையால் உதிர்த்து விடவும்.ஹை பிளேமில் வைத்தே பொரிக்கவும்.
நன்கு கிருஸ்பியாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூப்பாரான ஸ்வீட் ஸ்டால்பக்கோடா ரெடி.
0
Leave a Reply