இந்தியா அரை இறுதிக்கு முன்னேற்றம். தாமஸ் கோப்பை பேட்மிண்டன் பதக்கத்தை உறுதி செய்தது.
.டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின்முடிவில்இந்தியஅணி 3-0 என்றகணக்கில்சீன தைபேயை வென்று அரைஇறுதிக்குமுன்னேறியது.வெண்கலப்பதக்கத்தை உறுதிசெய்தது.
இந்திய வீரர் லக்ஷயா சென்முதலாவது ஒற்றையர் ஆட்டத்தின், சரிவில் இருந்து மீண்டு வந்து 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரான சோய் டிம் சென்னை (சீன தைபே) வென்றார்.
இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணைந்து, அடுத்துநடந்த இரட்டையர் ஆட்டத்தில் 23-21, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் சியுஹிசாங்சிக்- வாங்சிலின் (சீன தைபே)ஜோடியை வென்றனர்.
இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் 8-ம் நிலை வீரரான லின் சுன் யியை (சீன தைபே). இந்திய அணி, அரை இறுதியில் ,பிரான்ஸ் அல்லது ஜப்பானை சந்திக்கும்.
0
Leave a Reply