25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

May 11, 2026

வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட....

சில காரணங்களால் சில பேர் தூக்கம் வராம தவியா தவிப்பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, ராத்திரி9 மணிக்கு முன்னாடி சாப்பிட்டா பயன் கிடைக்கும். வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்கமாட்டேன்'னு சொல்றவங்க... சீரகத்தை இளவறுப்பா வறுத்துப் பொடி பண்ணி, வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்.

May 09, 2026

தினம் ஒரு பழம் சாப்பிட்டு வர ....

 தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படும். இரத்த சோகை சரியாகும்.இலந்தைப்பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.அன்னாசிப்பழம் தினம் சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.மாதுளம் பழத்தை படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.

May 08, 2026

கல்லீரலை சுத்தமாக்க....

 ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ்தண்ணீர் ஊற்றி, அதில் நசுக்கிய இஞ்சி மற்றும் ஒரு துண்டு எலுமிச்சையைச் சேர்க்கவும்.இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில்உள்ள  கொழுப்பைக் குறைக்க உதவும். எலுமிச்சை பித்த நீரைச் சுரக்கச் செய்து நச்சுக்களை வெளியேற்றும்.வாரத்தில்3 நாட்கள் செய்தாலே போதும், உங்கள் கல்லீரலில் உள்ள  நச்சுக்களை நீங்கி பலத்தை பெறும்.

May 07, 2026

முதுகு வலி குறைய....

மிளகு, கிராம்பு, சுக்கு டீ - 5 மிளகு,.6 கிராம்பு,.1கிராம் சுக்கு, சேர்த்து நீர் விட்டு டீ செய்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால்முதுகு வலி குறையும்.கொள்ளு ரசம் - கொள்ளு ரசம் குடித்தால்முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும்.வெற்றிலை, தேங்காய் எண்ணெய் - வெற்றிலை சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவிவர வலி குறையும்.

May 06, 2026

மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்பு வாழைப்பழங்களைச் சாப்பிட வேண்டும்.

மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்பு வாழைப்பழங்களைச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இது அவர்களின் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், வாழைப்பழங்களில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து, அவர்களின் மூளையைக் கூர்மையாக்கி, தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

May 05, 2026

 முதுமையை நீக்கி இளமை பெறச் செய்ய.....

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டில் ,கோலை ஊன்றி குறுகி நடப்பவனும், கோலை வீசி குலாவி நடப்பானே. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.காலையில் இஞ்சிச்சாறு15மிலி,மூன்று டீஸ்பூன்சுத்தமான தேன்எடுத்து  கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.

May 04, 2026

இதயத்தை பாதுகாக்கும் சீத்தாப்பழம் .

சீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.சீதாப்பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது.இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியை குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.சீதா பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்கும்.சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

May 02, 2026

வாயுவை விரட்டும் பெருங்காயம்.

வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு வந்தா வயிறு புடைச்சிக்கிட்டு மூச்சுவிட முடியாம தவிக்கிற நேரத்துல கால் ஸ்பூன் பெருங்காயப் பொடியை மோர்ல கலந்து குடிச்சா ஏப்பம் வெளியேறும். அதோட வாயு வெளியேறி  வயிறும் குறையும்.பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில்  பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல்  பிரச்சனை தீரும். தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை  அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

May 01, 2026

மருந்து இல்லா உண்மையான சிகிச்சைமுறை .

1. மன அழுத்தம்?- கிரீன் டீ - போதை பழக்கம் இல்லா உங்களை அமைதிப்படுத்துகிறது.2.தலைவலி? - வாழைப்பழங்கள் - வலி நிவாரணிக அதை அடக்குகின்றன.3. மலச்சிக்கல்? - ஆப்பிள்கள் - குடலை அழிக்கும் மருந்துகளைத் தவிர்க்கவும்.4. தொண்டை வலி? - தேன் - உண்மையான சிகிச்சைமுறை ஒரு பாட்டிலில் இல்லை.5. வறண்ட முடி? - சால்மன் - உங்கள் தலைமுடிக்கு உள்ளே இருந்து உணவளிக்கவும்.6. பல்வலி? - கிராம்பு - அதிக விலை கொண்ட மாக்கிரைகளை விட வலுவான நிவாரணம்.7. குறைந்த ஆற்றல்? - ஆரஞ்சு - இயற்கையின் சுத்தமான ஊக்கம்.8.தூக்கமின்மை? - கிவி - மெலடோனின் மாத்திரைகள் தேவையில்லை.

Apr 30, 2026

ஒரு நாளில் 5 நிமிடம் சுவரில் கால்களை உயர்த்தி வைத்தால்...

இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.மன அழுத்தத்தை குறைக்கும்.நரம்பு மண்டலத்தை சீராக்கும் .குதிகால் ,கால்வலி வீக்கத்தை குறைக்கும்.வெரிகோஸ் வெயின்ஸ் குறைய உதவும்.தலைவலி குறைக்கும்.செரிமானத்தை மேம்படுத்தும்.தினமும் 5-10 நிமிடம் செய்தால் போதும்.குறிப்பு: அதிக BP , உடல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை கேட்டுக்கொள்ளுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 51 52

AD's



More News