25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


முடி வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முடி வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய்

கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது.

கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.  

கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

கருஞ்சீரகத்தை எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தும் போது ,தலைமுடி உதிர்தலை நிறுத்தி முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கின்றன.மேலும் உச்சந்தலை பகுதியில் இருக்கும் குறைபாட்டை நீக்கும். முடி வறட்சியையும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும்.

கருஞ்சீரக எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் - தேங்காய் எண்ணெய்- 100ml,கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்,வெந்தயம்- 1 ஸ்பூன்

செய்முறை:முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.பின் அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தி வரலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News