சளி தொல்லை நீங்க...
சுக்கு, மிளகு, கொத்தமல்லி விதை, திப்பிலி, சித்தரத்தை ஆகிய அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்றாக கொதித்தபின் இறக்கி வடிகட்டி லேசான சூட்டில் பருகி வர நீண்ட நாள் சளி தொல்லை நீங்கும் (3 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்) .ஒரு நாளைக்கு ஒரு முறை என 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் குடித்துவர வேண்டும்.
வைரஸ்களினால் ஏற்படும் சளித் தொல்லையை சரி செய்ய நீங்கள் பழச்சாறை தேர்வு செய்யலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உங்கள் உடலுக்கு சிறந்தவை. ஆரஞ்சு, அன்னாசி, தர்ப்பூசணி போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் தொற்றுக்கு எதிராக போராடி நம்மைக் காக்கிறது.
0
Leave a Reply