25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொன்னியின் செல்வன் 2ம் பாகம்  நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ( APR 28TH)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ( APR 28TH)

பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது.   

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங்கில் எதிர்பார்த்ததை விடவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு. அதன்படி, நள்ளிரவு 1 மணி, அல்லது அதிகாலை 3, 4, 5 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்புக் காட்சி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்

.பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என சொல்லப்படுகிறது , டிக்கெட் கட்டணங்கள் அதிகமாக வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூலிக்கும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News