அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கஇன்று கொல்கத்தாவுக்கு வருகிறார்.
அர்ஜென்டினா அணியின் கேப்டன்,உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான, லியோனல் மெஸ்சி இன்று கொல்கத்தாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாக மடைந்துள்ளனர்.அவரது கட் அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
70 அடிஉயரத்தில், கையில்உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்றுவடிவமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின்சிலையைகாணொலி மூலம் திறந்து வைக்கிறார். மெஸ்சியின் வருகையையொட்டிஅங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
0
Leave a Reply