இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகரம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. நூற்பு ஆலைகள் ஏராளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் மாந்தோப்புகளுக்கு பஞ்சமில்லை. இங்கு சப்பட்டை மற்றும் பஞ்சவர்ணம் ரக மாம்பழங்கள் அதிக மாக விளைகின்றன. இவை மற்ற பகுதி களில் விளைந்தாலும், ராஜபாளையம் பகுதியில் இருந்து விற்பனைக்கு வரும் சப்பட்டை, பஞ்சவர்ணம் ரக மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.
ராஜபாளையம் மாம்பழங்கள், குறிப்பாக சப்பட்டை மாம்பழம் தனது தனித் துவமான சுவை மற்றும் வடிவமைப்புக்காக பெயர் பெற்றவை. சப்பட்டை ரக மாம்பழம் ஆப்பிளை போல இருக்கும். இது,புளிப்பு இல்லாமல் தித்திப்பாக இருக்கும் ஒரு வகை மாம்பழம். விருந்து உபசரிப் பின்போது இந்த வகை மாம்பழங்கள் முக்கியமாக இடம்பெறும். பஞ்சவர்ணம் ரக மாம்பழமும், சப்பட்டை ரகத்தை போலவே, ராஜபாளையத்தின் ஒரு பிரபலமான மாம்பழ வகையாகும். இந்த2 ரக மாம்பழமும் மாம்பழ பிரியர்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பவை. எனவே ராஜபாளையம் பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு எப்போதுமே கடும் கிராக்கி இருப்பதும் அனைவரும் அறிந்தது.
கடந்த ஆண்டு மாம்பழங்கள் விலை ரூ.120 முதல் ரூ.140 வரை இருந்தது. தற் போது மா மரங்களில் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் தற்போது மாம்பழம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் இப்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு மாம்பழங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.
0
Leave a Reply