ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும், பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு.
விருதுநகர் மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது.
ராஜபாளை யம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் பகுதியிலிருந்து 6வது மைல் பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் மூலம் 28 ஆயிரம் இணைப்புகளுக்கு நபருக்கு 60 லிட்டர் வரை ஏற்கனவே குடிநீர் வினியோகம் செய் யப்பட்டது.
தற்போது புதிதாக 10. ஆயிரம் இணைப்புகள் என 38,800 இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் 6வது மைல் தேக்க குடி நீரும், தாமிரபரணி குடிநீர் கலந்து பழைய இணைப்புகள் வழியே விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர் வடிகால் அதிகாரிகள்: குடிநீர் விநியோகத்திற்கு நகராட்சி 18 மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சோதனை முழுமை அடைந்த நிலையில் 7 மண்டலங்கள் டிச. ல் நகராட்சியிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது.வரி உயர்வுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் கவுன்சில் கூட்டத்தில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.
முழுவதும் ஒப்படைக்கப்படும் சூழலில் புதியவரி நிர்ணயம் செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண் டும் என்பதால் பழைய குழாய்கள் வழியே வினி யோகம் செய்யப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு உயர்த்தப்பட்ட வரியை ' வசூலிக்க முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், புதிய வரிவசூல், தண்ணீர் திருட்டு போன்றவை கண் காணிக்க முடியாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
0
Leave a Reply