விளையாட்டு போட்டிகள் .JUNE 26TH
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லையில் நேற்று மதுரை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி கேப்டன் சுரேஷ் குமார் 'பவுலிங்' தேர்வு செய்தார். மதுரை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது.
திருச்சி அணி 18.1 ஓவரில் 137/6 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹாக்கி
ஜெர்மனியில், நான்கு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஜூனியர் ஹாக்கி தொடரில், இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் மோதின.
முதல் போட்டியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த இந்தியா, பின் எழுச்சி கண்டு 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது. மூன்றாவது போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக தோல்விய டைந்தது.
மூன்றாவது இடத் துக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடம் பிடித்தது.
ஸ்குவாஷ்
மலேசியாவில் ஆசிய ஸ்குவாஷ் இரட் டையர் சாம்பியன்ஷிப் தொடரில் ,ஆண்கள் இரட்டையரில் நடப்பு சாம்பியன், இந்தியாவின் அபேசிங், வேலவன் செந்தில்குமார் ஜோடி, அரையிறு தியில் ஹாங்காங்கின் சிம் வாங், மின் ஹாங் டங் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 11–5 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த செட்டை யும் 11-9 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
துப்பாக்கி சுடுதல்
ஆசிய சாம்பியன்ஷிப் உலக கோப்பை டேராடூனில் நடக்கும் ,தொடருக்கான தேசிய தகுதி போட்டியில் இந்தியாவின் அனிஷ் (25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்') முதலிடம்.
செஸ்
சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் ,மும்பை தொடரின், 9வது சுற்றில் ஜார்ஜியாவின் லாவினை வீழ்த்திய இந்தியாவின் லலித் பாபு, 8.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன்.
0
Leave a Reply