ரன்வீர் சிங் நடித்துள்ள ஆதித்யாதர் இயக்கத்தில் 'துரந்தர் 2', மார்ச் 19ல் ரிலீஸாகிறது. இப்படத்தின் முன்பதிவு கடந்த வாரம் துவங்கி, 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாம். இந்தியாவில் மட்டும் 60 கோடி, வெளிநாடுகளில் 40 கோடி என முன்பதிவு ஆகியுள்ளதாம். இது மேலும் அதிகரிக்கலாம்.
தேர்வுகள், சட்டசபை தேர்தல் போன்ற காரணங்களால் இந்தவாரம் ரிலீஸில் சுணக்கம் நிலவுகிறது.தமிழில் குறைந்தது ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வெளியான நிலையில் இந்தவாரம் மார்ச் 19ல் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள 'யூத்' படம் மட்டுமே வெளியாகிறது. தவிரஹிந்தி படமான 'துரந்தர்2 ' தமிழில் டப்பாகி ரிலீஸாகிறது. கென் கருணாஸ் இயக்கி நடித்தி ருக்கும் 'யூத்' படம் மார்ச் 19 ரிலசாகிறது. இப்பட விழாவில் பங் கேற்று பேசிய நடிகர் தனுஷ், "யூத் அடைகிற வெற்றி அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர் கருப்பையாவிற்கு தான் சேரும். எல்லார்கிட்டையும் எல்லாம் இருக்கும். ஆனால் கொடுக்க மனம் வராது. நட்பை வார்த்தையில் வைக்காமல் மனதில் வைப்பது நல்லது"எவ்வளவு வெற்றி அடைந்தாலும் கென், அவரை மனதில் வைக்க வேண்டும். மறக்க கூடாது என அறிவுரை வழங்கினார்.
'பூச்சக் கொரு மூக்குத்தி' 1984ல் மோகன்லாலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.பிரியதர்ஷன், பின்னர் பல மொழிகளில் படங்களை இயக்கினார். இவரது 98வது படம் ஏப்.10ல் ரிலீசா கும் அக்ஷய் குமாரின் 'பூத் பங்களா' ,ஹிந்தியில் சைப் அலிகான் நடிப்பில் 'ஹைவான்' 99 வது படத்தை இயக்க உள்ளார். தனது முதல் படத்தில் நடித்த மோகன்லாலை பிரியதர்ஷன், இயக்கும் 100வது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
குணச்சித்ர வேடங்களில் நடித்த செம்மலர் அன்னம், தற்போது 'மயிலா' எனும் படத்தை இயக்கியுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியானது. படம் பற்றி பேசிய செம்மலர் அன்னம், பெண்கள் பெரும் பொறுப்புகளை சுமந்தாலும் அதற்கான அங்கீகாரம் அரிதாகவே கிடைக்கிறது “நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளால் உருவானது .
50க்கும் மேற்பட்ட படங்கள் இந்தாண்டில் இதுவரை வெளியாகி உள்ளன. இந்தவாரம் மார்ச் 13ல் "கெணத்த காணோம், கொலைச் சேவல், போலீஸ் பேமிலி, வெஞ்சென்ஸ், வௌவல்ஸ்" ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. பிரியங்கா மோகனின் 'மேட் இன் கொரியா' படம் மார்ச் 12ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
ஆதித்யா தர்,ரன்வீர் சிங் கூட்டணியில் துரந்தர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. மார்ச் 19ல் படம்வெளியாகஉள்ளநிலையில் இதன்டிரைலர்மார்ச் 7ம்தேதிவெளியானது.தமிழ், தெலுங்குஉள்ளிட்ட 5 மொழிகளையும் சேர்த்து 65 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் இந்தாண்டில் இதுவரை வெளியான 50க்கும் அதிகமான படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி' ஆகிய படங்கள் தான் லாபம் தந்துள்ளது. 'தாய் கிழவி. படம் வெளியான 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது.
'வாரணாசி' படத்தில் ராஜமவுலி இயக்க, நடிக்கிறார் மகேஷ்பாபு. அவர் அளித்த பேட் டியில், “2006 ரிலீசான 'போக்கிரி' படம் வெற்றி பெற்று என்னை ஸ்டார் ஆக்கி,. எனக்கு வேறு வித மான பெரிய அனுபவத்தை கொடுக்கிறது" ,ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது.
அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட2 மடங்கு இப்போது சூர்யா ஜோதிகா ஒருவேளை சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.நான் சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான்7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ.15000 வருகிறது. பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய7 ஆண்டுகள் ஆன செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரம்யா நம்பீசன் தி கோட்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. கோட் படத்தைப் போலவே தந்தை மகன் என சிவகார்த்திகேயன் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார். பிரபல ஹாலிவுட் நிறுவனமான லோலா வி.எஃப்.எக்ஸ் இந்த படத்திற்கான வி .எஃப்.எக்ஸ். பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.