ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கான் சிட்டி'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.நடுத்தரக் குடும்பம் ஒன்று சந்திக்கும் கடன் தொல்லைகள் மற்றும் அதனால் ஏற்படும் வாழ்வாதாரப் போராட்டங்களை மையமாகக் கொண்டு, மிகவும் எதார்த்தமான பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் பேசுகையில், ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்து கொண்டார்:"சுமார் 5 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தான் எனக்கு இந்த இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் யோகிபாபு அண்ணனை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். எனது சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அவர், எனக்காகத் தனது வழக்கமான சம்பளத்தில் பாதியை மட்டுமே வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார்."இதற்குப் பதிலளித்துப் பேசிய யோகிபாபு, "ஹரிஷ் துரைராஜ் வருங்காலத்தில் இன்னும் பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிப் புகழின் உச்சிக்குச் செல்ல வேண்டும்" எனத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜெமினி பிலிம் சர்க்யூட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை (Biopic) அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட புதிய படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.நாயகன்: ஆர்யன் ஷியாம்.இயக்குனர்: ஆனந்த் பிரசாத்.
நடிகை மதுபாலா மற்றும் இந்திரன்ஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. இவர்களுடன் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 19 அன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது.இயக்குனர் வர்ஷா வாசுதேவ் படம் பற்றிக் கூறுகையில்:"புனித நகரான காசியில், முற்றிலும் எதிர்பாராத சூழலில் சந்திக்கும் ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உருவாகும் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை (Emotional bond) மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது."
2026-ம் ஆண்டின் முதல் அரையாண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.அந்த வகையில், "அந்தரன்", "அனந்தன் காடு", "அங்கீகாரம்", "கான்சிட்டி", "ப்ராமிஸ்" உள்ளிட்ட ஐந்து திரைப்படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளன. இதில் நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான "கருப்பு" திரைப்படம், பல்வேறு தயாரிப்பு மற்றும் வெளியீட்டு சவால்களை கடந்து மே 15-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.20.66 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவும், த்ரிஷாவும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பல திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
நடிகை சமந்தா நடித்து, தயாரித்துள்ள "மா இன்ட்டி பங்காரம்" (தமிழில் "எங்கள் தங்கம்") திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்து பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்."உனக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சாம். அன்பிற்கும் வெற்றிக்கும் நீ முழுமையாக தகுதியானவள். இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நயன்தாரா பதிவிட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, "என் அன்பிற்குரிய நயன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "கட்டா குஸ்தி 2" திரைப்படம் ஜூலை 3-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள "இரண்டு வானம்" திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால், "முழு படத்தையும் பார்த்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளேன். காதல், வலி, உறவுகள் என பல உணர்வுகளை கொண்ட இந்தப் படத்தை ரசிகர்களும் ஆழமாக உணர்வார்கள்" என்று தெரிவித்தார்.
கடந்த வாரத்துடன் இதுவரை தமிழில் வெளியான படங்கள் எண்ணிக்கை 108ஐ கடந்துவிட்டது. இந்தவாரம் ஜூன் 19ல், "டார்க் ஜெயன்ட், மக்கள் தலைவா, மனு, பதினென் கீழ்க்கணக்கு, நூறு சாமி" ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றில் நூறு சாமி படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. தவிர சமந்தாவின் மா இண்டி பங்காரம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் ரிலீஸாகிறது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜில்லா'மற்றும் 'மெர்சல்' திரைப்படங்கள் ஜூன் 19ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத், மருத்துவத் துறையில் செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பயன்படுத்தப்படும் செவிலியர் சீருடை ஆங்கிலேயர் காலத்தின் தாக்கத்தை கொண்டதாகவும், இந்தியாவின் காலநிலைக்கு ஏற்ற வகையில் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு சீருடையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.