ஈரான் மீது இன்றிரவு அமெரிக்கா தாக்குதல்? 11. 06 .2026
வாஷிங்டன் / டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு மையமாகத் திகழும் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு வரும் வேளையில், "ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு மையமாக இருக்கும் தீவைக் கைப்பற்ற நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறோம். எனினும், ஈரான் மீது இன்றிரவு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும். அதேநேரம், ஈரானின் பாலங்கள் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பொது உள்கட்டமைப்புகளைத் தாக்க நாங்கள் விரும்பவில்லை."
0
Leave a Reply