தேன்கனிக்கோட்டை லட்சுமி நரசிம்மர்.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஒசூரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை.இங்கு கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது. இது ஒரு நாக தோஷ பரிகார தலமாகும். "கவி" என்றால் கன்னட மொழியில் 'குகை' என்று பொருள். இது ஒரு குகைக் கோவில் என்பதால், மேல் கூரை மிகவும் தாழ்வாக இருக்கும். எனவே பக்தர்கள் இறைவன் முன் உட்கார்ந்தபடிதான் பிரார்த்தனை செய்ய முடியும். இந்தக் கோவில் ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இக்கோவில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.
சில படையெடுப்பின் காரணமாக, இந்த ஆலயமும், அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளும் சிதிலமடைந்தன. இதனால் கோவிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டன. பல ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒரு நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று இந்தக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. பக்தர்களின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளில் இக் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சாலை வசதி இல்லாததாலும், விலங்குகள் அச்சுறுத்தல் காரணமாகவும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்திருந்தது. ஆனால் தற்போது சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.
0
Leave a Reply