தேசிய வாள்சண்டை போட்டி சாம்பியன்ஷிப்பில் பவானி தேவி தங்கம் வென்றார்.
கேரள மாநிலம் கண்ணுாரில், தேசிய வாள்சண்டை போட்டி சாம்பியன்ஷிப் 35வதுசீசன்நடக்கிறது.பெண்களுக்கான 'சாப்ரே' பிரிவு பைனலில் தமிழகத்தின் பவானி தேவி, கேரளாவின் சன்னி அல்கா மோதினர். அபாரமாக ஆடிய பவானி 15-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பவானி தேவி தேசிய சாம்பியன்ஷிப் அரங்கில் வென்ற 12வது தங்கப்பதக்கம். ஆண்களுக்கான 'போயில்' பிரிவில் பிபிஷ், ஆண்களுக்கான 'சாப்ரே' பிரிவில் கிஷோநிதி ,தலா ஒரு தங்கம் வென்றனர். இத்தொடரில் மூன்று தங்கம் வென்ற தமிழகம், தனிநபர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
0
Leave a Reply