பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், தமிழில் 'சாது, ஆளவந்தான்' என இரு படங் களில் மட்டுமே நடித்தார். ஜோஷுவா சேது ராமன் இயக்கும் 'லாயர்' என்ற படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். நீதிமன்றம் தொடர்பான கதை யில் உருவாகும் இப்படத்தில் இன்னொரு வக்கீல் வேடத்தில் ரவீனா நடித்து, 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்தில் நடித்துள்ளார் விக்ரம் மகன் துருவ். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அடுத்தபடியாக ஹிந்தியில் 2023ல் வெளியான 'கில்' படத்தின் தமிழ் ரீ மேக்கில் இவரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. நிகில் நாகேஷ் பட் இயக்கிய 'கில்' படத்தில் லஸ்யா லால்வாணி, தன்யா மணித்லா ஆகி யோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக வெளியானது.
8 தோட்டாக்கள், ஜீவி' போன்ற படங்களில் நடித்தவர் வெற்றி. தற்போது 'வெப், 7ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இயக்கத்தில் நடிக்க ,இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை அக்ஷிதா நடிக்கிறார். இயக்குனர் ஹாரூன் "இப்படத்தில் வெற்றி போலீஸ் அதிகாரியாக, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிக சஸ்பென்ஸ்கள் கொண்ட கதையாக உருவாக்கியுள்ளோம்" என்றார்.
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார்.அவரது50வது பிறந்தநாள் ஜூலை12ல் வருகிறது.தமிழ் இலக்கியத்திற்கும், திரையிசை பாடல்களுக்கும் இவர் ஆற்றிய பங்களிப்பை கொண் டாடும் விதமாக சென்னை, ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜூலை5ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இயக்குனர்கள் ஆர்.வி., உதயகுமார், செல்வ மணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர், தேசிய, மாநில விருதுகளும் வென்றுள்ளார்.
பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா உலகளவில் பிரபலமானது. இந்தாண்டுக்கான விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வெள்ளை நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் உடன் கூடிய பனராஸ் புடவையை அணிந்து வந்ததோடு, நெற்றி வகிட்டில் குங்குமத்தை (சிந்துார்) திலகமிட்டு சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார். இதேபோல் நடிகை அதிதி ராவ்வும் சிவப்பு நிற புடவையில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை திலகமிட்டு பங்கேற்றார். சமீபத்தில் பாகிஸ்தானில் பயங்கர வாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அதிரடி ஆப்பரேஷன் 'சிந்துாரை' பிரதிபலிக்கும் விதமாக இவர்கள் இப்படி திலகமிட்டு பங்கேற்றதாக சொல்கிறார்கள் .
சேகர் கம்முலாஇயக்கத்தில்தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகாநடிப்பில்ஜூன் 20ல்வெளியாகும்படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இதன் டீசர் 'டிரான்ஸ் ஆப் குபேரா' என்ற பெய ரில் வெளியாகி உள்ளது. என்ன மாதிரியானகதைஎன்பதையூகிக்கமுடியாதசூழலில்டீசர்உள்ளது. 24 மணிநேரத்தில்தமிழ்டீசர் 28.5 லட்சம்பார்வைகளையும், தெலுங்கு டீசர் 33.25 லட்சம் பார்வைகளையும் கடந்தது.
சூரி, ஐஸ்வர்யலட்சுமி நடிப்பில் ,பிரசாந்த் பாண்டி ராஜ் இயக்கத்தில், வெளியான குடும்ப படம் 'மாமன்'. 25 கோடிக்கு மேல் வசூலித்து லாபக்கணக்கில் சேர்ந்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு சூரி "உண்மையான வெற்றி உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் மனதார மதிப்பு கொடுப்பதில் தான் ஆரம்பமாகிறது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த நம்பிக்கையோட மாமன் கதையை துவங்கினேன். மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கை யிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஒரு உணர்வுப்பூர்வ மான பயணம். உங்கள் அன்பும், ஆதரவுமே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
'விலங்கு' வெப்சீரிஸ் தந்த வரவேற்பால் கதை தேர்வு விஷயத்தில் கவன முடன் இருந்து வருகிறார் நடிகர் விமல். தற்போது தேசிங்கு ராஜா 2, பரமசி வன்பாத்திமா ஆகியபடங் களில் நடித்து வருகிறார். அடுத்து மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் பட புகழ் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான 'ஜென்.இ.மேன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போகிறார். சிதம்பரத்தின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க போகிறார்.
அன்பு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ள, மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் 'படை தலைவன்'. முக்கிய வேடத் தில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளனர். ஏஐ., தொழில்நுட்பம் மூலம் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த்தை இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர். யானையை பின்புலமாக வைத்து இந்த கதை உருவாகி உள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது மே 23ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள, மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். இசையமைப்பில் உருவான'தக்லைப்'. படம் ஜூன் 5ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியிட்டனர். 24 மணிநேரத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டிரைலர் தமிழில் 18.8 மில்லியன் பார்வைகளும், ஹிந்தியில் 3 மில்லியன் பார்வைகளும், தெலுங்கில் 3.8 பார்வைகளும் பெற்றுள்ளது. கமல் இதற்கு முன் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்த நிலையில் அதனை தக்லைப் முறியடித்துள்ளது.