மே 1ல் ரிலீசான தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ' ஹிட் 3' படம். நானி பேசுகையில், "இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் வர்மா ஆகியோர் தங்களுக்கான சினிமா யுனிவர்ஸ் உருவாக்கியுள்ளனர். நான் 'ஹிட்' படத்தின் யுனிவர்ஸில் இணைந்துவிட்டேன். அதேபோல்எதிர்காலத்தில்ஏதாவதுநடந்தால், நானும்லோகேஷின்சினிமாயுனிவர்ஸில்(எல்சியூ)இணைந்தால்மகிழ்ச்சியடைவேன்.அவரின் படைப்புகள் எனக்கு பிடிக்கும்" என்றார்.
'புலிகொண்டா, ஸ்பைடர், கேம் சேஞ்சர்' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்ர கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கோர்ட்' படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. பிரியதர்ஷி கூறுகையில், ''ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்ததும் சந்தோஷம். சினிமாவில் நடிகர் கமல் தான் என் இன்ஸ்பிரேஷன் அவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை" என்றார்.
மே 1ல் ரிலீசான சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இப்பட விழாவில் பேசிய சிம்ரன் "நல்ல குடும்ப கதையாக இருப்பதால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்துக்கு உடனே 'ஓகே' சொன்னேன். இன்னொரு காரணம், சசிகுமார். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது திறமைக்கு முதலிடம். அந்தவகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் .அடுத்தடுத்து குடும்ப பாங்கான கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்"என்றார்.
மோகன்லால் நடித்து வெளியான படம் 'தொடரும்.” ஷோபனா நாயகியாக நடித்துள்ளார்.இருவரும் நீண்ட இடை வெளிக்கு பிறகு இணைத் துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள மோகன்லால் “தொட ரும்” படத்திற்கான வரவேற்பால் நெகிழ்ச்கிய டைந்தேன். படத்தை கருணையுடன் ஏற்றதற்கு நன்றி. இந்த நன்றியுணர்வு என்னுடையது மட்டுமல்ல. இந்தப் பயணத் தில் என்னுடன் பயணித்து, ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் அன்பையும், முயற் சியையும், உணர்வையும் அளித்த ஒவ்வொருவருக்கும் இது சொந் தமானது' எனக் கூறியுள்ளார். 'தொடரும்'. கிரைம் திரில்லர் களத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூலில் உலகளவில் ரூ.100 கோடியை கடந்தது. இப்படத்திற்கு தமிழகத்திலும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதன் தமிழ் பதிப்பு தமிழகத்தில் மே 9ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவி டம் பேச்சுவார்த்தை நடக் கிறது. ரூ.18 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனை குறைக்க சொல்லியும் பேச்சு நடக்கி றதாம். ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்''சைரா' நரசிம்மரெட்டி, காட்பாதர்' படங்களுக்கு அடுத்து 3வது முறையாக சிரஞ்சீவி - நயன் தாரா இணைந்து நடிப்பது உறுதியாகிவிடும். 'டாக்ஸிக், மண்ணாங் கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன் தாரா.
2024ல் 'ஸ்பிரிட்' படம் துவங்க இருந்தபோது தீபிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.அந்த சமயத்தில் குழந்தைக்கு தாயாக இருந்ததால் நடிக்க முடியாது என மறுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தற்போதுஒப்புக்கொண்டுள்ளார் தீபிகாபடுகோன். நடிகர் பிரபாஸ் கைவசம், 'தி ராஜா சாப், பாஜி, ஸ்பிரிட், சலார் 2' படங்கள் உள்ளன. இதில் தி ராஜா சாப், பாஜி படங்களின் படப்பிடிப்பு' விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில்நடிக்கஉள்ளார்.அக்டோபரில்படப்பிடிப்புதுவங்குகிறது.இதில்நடிகைதீபிகாபடுகோன்நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஏற்கனவே 'கல்கி' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் மலையாள நடிகையான பாவனா தமிழில் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக கன்னடத்தில் மட்டும் நடித்து வரும் இவர் 14 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் ஜெயதேவ் இயக்கத்தில் 'தி டோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி நடித்துள்ளனர். ஹாரர் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இப்படம் இம்மாதம் வெளியாகிறது.
“டிராகன்” படத்தை தொடர்ந்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது டிராகன் படத்தை தொடர்ந்து “பரதா “என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியான நிலையில் நடிகை சமந்தா முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஆர்யா, நயன் தாரா, சந்தானம் நடிப்பில், 2010ல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் கடந்தவாரம் ரீ ரிலீஸானது. 15 ஆண்டுகளுக்குப் பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணி உள்ளார் ராஜேஷ். இவர் கூறுகையில் "நானும், ஆர்யாவும் இதற்கான முயற்சியில் உள்ளோம். கதையை உருவாக்கி விட்டேன். ஆர்யா உடன் நயன்தாரா, சந்தானமும் இணைந்தால் படம் நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அதற்கான பேச்சுவார்த்தை அவர்களிடம் நடக்கிறது" என்றார்.
'மாமன்னன்'. மாரி செல்வராஜ் இயக்கிய படம் வெற்றி பெற்ற நிலையில், வடிவேலு, பஹத் பாசில் இந்த இருவரும் இணைந்து நடித்த ''மாரீசன்'எனும் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள் ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கும் நிலையில் ஜூலையில் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை படக்குழு குறிப்பிடவில்லை