25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Oct 23, 2024

13 வயதில்  ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்  கதீஜா 3 மொழிகளில் பாடிய எந்திரன் பாடல்.

எந்திரன் படத்தில் "புதிய மனிதா பூமிக்கு வா பாடலில் வரும் மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய், உனது ஆற்றலால் உலகை மாற்றுஎந்த,எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு,  நிலையிலும் உண்மையாயிரு வரிகள் தனது 13 வயதில் மூன்று மொழிகளில் பாடியது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் தான் - 

Oct 23, 2024

மூச்சு விடமால்  வேகமாக பாடிய அனிருத்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிர தீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம் பெனி' சுருக்க மாக 'எல்.ஐ.கே என குறிப்பிடுகின்றனர். அனி ருத் இசையமைக்கும் இந்த படத்திலிருந்து 'தீமா' எனும் முதல் பாடலை வெளியிட் டுள்ளனர். விக்னேஷ் சிவன் பாடலை எழுத அனிருத்தே பாடி உள்ளார். முதல் முயற்சி யாக மூச்சு விடாமல் வேகமாக பாடியுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

Oct 23, 2024

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.

ரஜினியின் 170வது படமான இதை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் ஏற்கனவே மனசிலாயோ, ஹண்டர் வண்டார் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரின் மாஸ் மொமண்ட்ஸையும் கொண்டாடும்படி உள்ளது.. மொத்தத்தில் வேட்டையன் மாஸ் பிளஸ் கிளாஸ் நிறைந்த மெசேஜ் உள்ள படம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி Above average என பதிவிட்டு உள்ளார்.வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவுக்கு தான் சொல்லி இருந்தாராம் இயக்குனர் ஞானவேல், ஆனால் இது ரஜினிகாந்துக்கு பொருத்தமாக இருக்கும் என சூர்யா சொன்னதை அடுத்து தான் சூப்பர்ஸ்டாரை வைத்து வேட்டையன் படத்தை எடுத்திருக்கிறார் ஞானவேல்.வேட்டையனுக்கு பிளாக்பஸ்டர் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜெயிலர் பட சாதனையை முறியடிக்குமானு தெரியல, ஆனா அத விட ரொம்ப நல்ல படம். ஞானவேல் எங்க ஜெயிக்குறார்னா ரசிகர்களுக்கு மாஸ் மொமண்ட்ஸ படம் பூரா உறுத்தல் இல்லாம தெளிச்சு வெச்சுருக்காரு. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத படம்..

Oct 16, 2024

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் 'கொம்பு சீவி'

பொன்ராம் இயக்கத்தில்நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில்“ கொம்பு சீவி “படத்தை இயக்கினார். சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கொம்பு சீவி என தலைப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கதை 1996ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் நடந்தது .

Oct 16, 2024

ரூ.500 கோடி வசூலைக் கடந்த 'தேவரா'

 கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜூனியர் என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் நடிப்பில் செப்., 27ல் வெளியான படம்'தேவரா'.16 நாட்கள் முடிவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூனியர் என்டிஆர் தனி நாயகனாக நடித்த படம் ஒன்று ,500 கோடி வசூலை கடப்பது இதுவே முதல் முறை.

Oct 16, 2024

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் பிஸியாகி வருகிறார். 

எஸ்.ஜே.சூர்யா தமிழ், தெலுங்கை அடுத்து மலையாளத்திலும் கால் பதித்துள்ளார். பஹத் பாசில் உடன் ஒரு படத்தில் நடித்து வரும் இவர், இன்னொரு மலையாள படத்தில் துல்கர் சல்மான் உடன் நடிக்க உள்ளார்.  எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு நடிப்பில் பிஸியாகிவருகிறார்.நிகாஸ் ஹிதாயத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது. இதுதவிர இன்னும் சில மலையாள பட வாய்ப்புகள் அவரை தேடி வரத் துவங்கி உள்ளன.

Oct 16, 2024

அக்டோபர் 18ல் 5 சின்ன படங்கள் ரிலீஸ்

இரண்டரை மாதங்களில்2024ம் ஆண்டு முடிவடைய உள்ளது. அதற்குள் தங்களது படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இந்த வாரம் அக்., 18ல் "ஆலன், ஆர்ய மாலா, கருப்பு பெட்டி, ராக்கெட் டிரைவர், சார்" ஆகிய சின்ன பட்ஜெட் படங்கள் - வெளியாகின்றன. சின்ன படங்கள் என்றா லும் அதில் சில தரமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர  உள்ளது..

Oct 16, 2024

பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ,தமிழ் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஸ்ரீ கணேஷ் இயக்கும் தனது 40வது படத்தில், சித்தார்த், மீதா குமார், சைத்ரா ஆச்சார் நாயகிகளாக நடிக்க, முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார். இவர் பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ஆவார். 25 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் முதன் முறையாக தமிழ் படத்திற்கு இசையமைக்கிறார் அம்ரித் ராம்நாத்.

Oct 09, 2024

-இயக்குநர் த.செ.ஞானவேல்

இரண்டு படம் மட்டுமே பண்ணிட்டுதான் அவர்கிட்டே போயிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலசந்தர் சாருக்கு என்ன மரியாதை தருவாரோ, அதே மரியாதைதான். இதைத் தன் இயக்குநர் ஒவ்வொருவரிடமும் ரஜினி சார் காட்டுவார். நான் போய் நின்றால், எழுந்து நின்றுதான் பேசுவார். நான் பிறப்பதற்கு முன்னால் நடிக்க வந்தவர். அவரின் ரசிகர்கள் தலைமுறை தாண்டி இதனால்தான் வருகிறார்கள்.

Oct 09, 2024

காது கேட்காம, வாய்பேச முடியாம தமிழ் சினிமாவில் 15 வருஷமா நடிக்குற ஒரே நடிகை

திரைவாழ்க்கையை நாடோடிகள் திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பிறகு, அத்திரைப்படத்தின் மொழிமாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அறிமுகமானார்.காது கேட்காம, வாய்பேச முடியாம தமிழ் சினிமாவில் 15 வருஷமா நடிக்குற ஒரே நடிகை நாடோடிகள் அபிநயா மட்டும் தான்.இவங்க திறமைக்கு வாழ்த்தலாம்..

1 2 ... 39 40 41 42 43 44 45 ... 59 60

AD's



More News