வீடுகளுக்கு உள்ளேயே வளர்க்கும் இன்டோர் பிளான்ட்ஸ்
இன்டோர் பிளான்ட்ஸ் என்றழைக்கப்படும் வீடுகளுக்குள்ளேயே வளர கூடிய தாவரங்கள் வீடு அல்லது வீட்டின் ஒரு அறையயை அலங்கரிக்கும் நோக்கங்களுக்காக, சுத்தமான காற்றை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்க உதவி கூடியவையாக இருக்கின்றன. அழகான வீட்டோடு சேர்த்து பால்கனி தோட்டத்தை அமைக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. பலரும் வீட்டினுள் சிறிய அளவிலான செடிகளை வைத்து வளர்த்து வந்தாலும், சிலநேரங்களில் தங்களது பிஸியான வேலைகளுக்கு நடுவே அவற்றை முறையாக பராமரிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
பாம்பு செடி(SnakePlant): ஸ்னேக் பிளான்ட் என குறிப்பிடப்படும் பாம்பு செடியானது குறைந்த சூரிய வெளிச்சம் மற்றும் குறைந்த நீரை சார்ந்து எளிதில் உயிர்வாழும் தாவரமாகும். இந்த தாவரத்தை வளர்க்க வழக்கமான அடிப்படையில் பராமரிப்பது மற்றும் தண்ணீர் ஊற்றுவது தேவையில்லை. எனவே பிஸியாக இருக்கும் நபர்களுக்கு இந்த தாவரம் சிறந்த தேர்வாக அமைகிறது. இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் காற்று சுத்திகரிக்கப்படும்.
மணி பிளான்ட்(MoneyPlant): பணத்தாவரம் என்றழைக்கப்படும் மணி பிளான்ட் வீடுகளில் வளர்க்க மிகவும் எளிதான இன்டோர் பிளான்ட் ஆகும். தொட்டிகள் முதல் பாட்டில்கள் வரை குறைந்த பராமரிப்புடன் இது எங்கும் வளரக்கூடியது. வாஸ்து மற்றும் ஃபெங் சுய்-ன் படி இந்த தாவரம் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை தருவதாக நம்பப்படுகிறது.
0
Leave a Reply