'கூலி' படத்தில் அடுத்தடுத்து இணைந்த பிறமொழி நடிகர்கள்
லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது படத்தில் நடித்து வரும் நடிகர்களின் அறிவிப்பை படக்குழுவினர் வெளி யிட்டு வருகின்றனர். அந்தவகையில் தயாளாக மலையாள நடிகர் சவுபின் சாகிர், சைமனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் நடிப்பதை அவர்களின் முதல் பார்வையுடன்' அறிவித்துள்ளனர்.சென்னை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 177-வது படத்துக்கு “கூலி” என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் அறிமுக விடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
5- 16 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் தங்க கட்டிகளையும் நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவின் இடையிலிருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி, உள்ளே வருகிறார் .தங்க நகைகள் மட்டும் கலரிலும் ,மற்றவை ப்ளாக் அன்ட் வொயிட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply