25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Interact Club  President  தாமரைச் செல்வி ரோட்டரி இறை வணக்கம் பாடினார்.

சிறப்பு விருந்தினராக Rtn. முகமது சர்பராஸ், கத்தார்  சென்ட்ரல் பேங்க், கத்தார். (Retd. AGM, Reserve Bank of India) கலந்து கொண்டு சிறப்பித்தார்.  Rtn.M.J. வெங்கட பெருமாள், Chairman - Youth Service  அனைவரையும் வரவேற்று, விருந்தினரை கெளரவம் செய்தார். பள்ளி முதல்வர் திரு.S. கோபால கிருஷ்ணன் விருந்தினரை அறிமுகம் செய்தார்.

சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தாங்கள்  படிக்கும் காலத்தில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு உண்டான சரியான முயற்சியையும், திட்டமிடலையும் செய்ய வேண்டும்  என்று  கூறினார்.

மேலும் வணிகவியல் மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு உண்டான பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் தெளிவாக எடுத்துரைத்தார் . மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளித்து பேசினார்.

மாணவர்கள் தங்கள் அறிவை  மேம்படுத்திக் கொள்ள தினமும் செய்தித் தாள்களை வாசிக்க வேண்டும் என்றும் ஆங்கிலப் புலமையின் முக்கியத் துவத்தையும் தன்னுடைய அனுபவத்தின் மூலம் விளக்கிக் கூறினார்.

Interact Club  Secretary சனந்தா  நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News