இயக்குனர் ஷங்கருக்கு அமெரிக்க விசா கிடைக்க உதவிய பாடல்:
படத்தில் ஒரு பாடலை தவிர அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். அந்த ஒரு பாடலை வாலி எழுதியிருந்தார். ஆனால் அந்த ஒரு பாடல் தான் இயக்குனர் ஷங்கருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவை பெற்று கொடுத்துள்ளது என்றால் நம்ப முடிகிறது. இதுதான் உண்மை. இது குறித்து பேசிய ஷங்கர், அமெரிக்கா செல்வதற்காக விசா நேர்காணலுக்குச் சென்றுள்ளார். அமெரிக்கன் எம்பெஸியில், ஒரு அமெரிக்கப் பெண் அதிகாரி அவரிடம் நீண்ட நேரமாக விசாரணை நடத்தியுள்ளார். நீங்கள் யார்? எதற்காக அமெரிக்கா செல்கிறீர்கள்? உங்கள்பின்னணி என்ன?" என சுமார் அரை மணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார். இந்த கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் சொல்லி இருந்தாலும், அந்த அதிகாரிக்குத் திருப்தி ஏற்படவில்லை. விசா கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது அப்போது அந்தப் பக்கமாக தூதரகத்தில் பணியாற்றும் ஒரு தமிழர் தற்செயலாக வந்து என்னை அடையாளம் கண்டுகொண்டு இவர் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குளர்,'காதலன்" என்ற படத்தை இயக்கியவர்" என்று அந்த அதிகாரியிடம் கூறினார்.
அதற்கு அந்த அமெரிக்கப் பெண், "காதலனா? என்று சந்தேகமாக கேட்டார் அப்போது அந்த தமிழர், அந்தப் படத்தில் 'முக்காலா முக்காலா" என்ற பாடல் வருமே, அந்தப் படம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பெண் அதிகாரி அந்த படத்தின் இயக்குனரா என்று ஆச்சரியமாக கேட்டு, உடனடியாக விசா நடைமுறைகளை முடித்துவிட்டு எனக்கு அமெரிக்க விசாவுக்கான அங்கீகாரத்தை கொடுத்தார் என்று ஷங்கர் கூறியுள்ளார்.
0
Leave a Reply