பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கு கடந்த 2022
முதல் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் வருதை தமிழ்நாடு அரசு வழங்கி
வருகிறது.
2022ஆம் ஆண்டு ஆரூர்தாஸ், 2023ல் கவிஞர் மு.மேத்தா மற்றும் பி.சுசீலா
ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.
இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருது பழம்பெரும் நடிகை எம்.என்.
ராஜத்திற்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது முதுபெரும் இயக்குநர் எஸ்.பி.
முத்துராமனுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கிய எம்.என்.ராஜம் குழந்தை
நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன், பாசமலர்
உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதே போல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது சினிமா
வாழ்க்கையை தொடங்கிய எஸ்.பி.முத்துராமன் ரஜினி, கமலை வைத்து பல
வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவர் முரட்டுக்காளை, தர்மத்தின் தலைவன்,
குரு சிஷ்யன், சகலகலா வல்லவன், ஜப்பானில் கல்யாணராமன் உள்பட 70க்கும்
மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்..
0
Leave a Reply