பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக் 'சாம்பியன்'
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவின் சியோல் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் இகாஸ்வியாடெக், ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா மோதினர்.
முதல் செட்டை 1-6 என இழந்த ஸ்வியாடெக், 'டை பிரேக்கர்' வரை நீடித்த 2வது செட்டை 7-6 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஸ்வியாடெக் 7-5 என போராடி வென்றார்.
இரண்டு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்வியா டெக் 1-6, 7-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.
0
Leave a Reply