மலைப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கின்போது தப்பி பிழைப்பது கடினம்
விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக ஆறு, ஓடை கண்மாய்களில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் வரப்பு வெட்டுதல், நடவு, உழவு, பணிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளதால் கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கைலாந்தோப்பு ஆற்றில் பாலம்கட்டும் பணி துவக்கம்
கைலாந்தோப்பு ஆற்றில் பாலம் அமைந்து தர வேண்டி விவசாயிகளின் 40 ஆண்டு கோரிக்கையாக இருந்தது. அய்யனார் கோவில் ஆறுபகுதி முடங்கியாறு பிரிவில் இருந்து புதுக்குளம் பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டனேரி, கடம்பன்குளம் கண்மாய்களுக்கு பிரதானமாக கைலாந்தோப்பு ஆறு பாதை உள்ளது.மெயின் ரோட்டில் இருந்து ஆற்றின் மறுபுறமான வடக்கு பகுதியில் 8 கிலோ மீட்டர் 'பரப்பிற்கு இரண்டு பக்கமும் மருங்கூர் கண்மாய் பாசன விவசாபிகள் 300 க்கும் மேற்பட்டோர் உள்ளனர் தென்னை, மா, வாழை, நெல், காய்கறிகள், உள்ளிட்ட விளை பொருட்களை ஆற்றை கடந்து மெயின் ரோட்டிற்கு கொண்டுவர வழியின்றி தலித்து வந்தனர். ரூ.40 லட்சம் செலவில் 75 மீட்டர் அகலம் 12 மீட்டர் நீளத்தில் பாலப்பணிகள் தொடங்கியுள்ளது.
குளிப்பதற்கு அனுமதியில்லை என அறிவிப்பு போர்டு மட்டும் வைத்து வனத்துறை கடமையை முடித்துவிடுகின்றனர்.
மலைப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கின்போது தப்பி பிழைப்பது கடினம், இந்நேரம் மட்டும் வனத்துறையினர் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கின்றனர். கண்காணிப்பு இன்றி பொதுமக்கள் ஆபத்தான முறையில் குளிப்பதும் சிலஇளைஞர்கள் ஆற்றின் மறு பகுதி உள்ளே சென்று மாமிச சமையல், மது விருந்து என தன்னிலை மறப்பதும் பாட்டில்களை உடைத்து போட்டு வருவதும் தொடர்கதை யாகிறது. சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் முன்பே செக்போஸ்ட் அமைத்துகடந்து செல்வோரை முறையாக கண்காணித்து தடுத்தால் வன விலங்குகள், பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் குளிப்பதற்கு அனுமதியில்லை என அறிவிப்பு போர்டு மட்டும் வைத்து வனத்துறை கடமையை முடித்துவிடுகின்றனர்.
0
Leave a Reply