25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


வேளாண்மை

May 22, 2023

வீட்டு தோட்டம்செடிகள் வளமாக வளர...

வீட்டு தோட்டம் பராமரிப்பு மண் தொட்டியில் உருவாகும் உப்புப்படுவை நீக்க, வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சரிசமமான அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்.இந்த கலவையை தொட்டியின் மீது தெளித்து, பிளாஸ்டிக் பிரஷை கொண்டு நன்றாக தேய்க்கவும். அதில் செடியை நடுவதற்கு முன், நன்றாக காய விடுங்கள். தோட்டவேலை பார்க்கும் பொது கண்டிப்பாக கால்களில் செருப்பு அணிந்து கொள்ளவேண்டும் மற்றும் கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வது மிகவும் நல்லது.ஏன் என்றால் தோட்டத்தை பராமரித்து கொண்டிருக்கும்போது ஏதாவது கால்களில் குத்திவிடலாம். கைகளில் கிளவுஸ் அணியாமல் தோட்டத்தை பராமரிக்கும்போது நகங்களில் மண் புகுந்துவிடும்.இதன் காரணமாக கூட உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும். செடிகளை ட்ரிம் செய்யும்கருவி பழுதடையாமலும்,உடையாமலும் பாதுகாக்க,அதனைபயன்படுத்துவதற்கு முன், அதன் மீது காய்கறி எண்ணெய்யை தெளித்திடுங்கள். சிலரது தோட்டத்தில் செடிகளில் பஞ்சி பூச்சிகள் தாக்குதல் இருக்கும் அவற்றை கண்டறிந்தது பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூரலாய் ஸ்பிரே செய்ய வேண்டும். குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும்.வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்.இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்குஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை. இதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட் வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும்.இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான் வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம்.இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும்.செடிகளின் அடிப்பகுதியில் வீட்டில் இருக்கும் சமையலறை கழிவுகளை பயன்படுத்தலாம். அதாவது காபி தூள். டீ தூள் மற்றும் மற்ற கழிவுகளை செடிகளுக்கு உரமாக இடலாம். இதன் மூலம் செடிகள் வளமாக வளரும்.

May 15, 2023

மாடி தோட்டத்திற்கு மண்புழு உரம், தொழு உரம் தயாரிக்க

மண்புழு உரம் தயாரிக்க, முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில் தொட்டியில் குழியில் போட்டு வைக்கவும். கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும். அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.தொழுஉரம் தயாரிக்க ,"காய்ஞ்ச நிலத்துல ஆறு அடி நீளம். ரெண்டரை அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அதுல தென்னமட்டைகளைப் பரப்பி வைக்கணும்.அதுக்கு மேல காய்ஞ்ச இலை தழைகள பரப்பணும். அதுக்கு மேல மாட்டு சாணம். கோமியம் கலந்த கெட்டியான கரைசல பரவலா ஊத்தணும்.அடுத்ததா, தண்ணியில 24 மணிநேரம் ஊற வெச்ச மரக்கரியைப் பரவலா போடணும். இது கார்பன் சத்துக்கு. அடுத்ததா, வேப்பிலை, ஆடு, மாடுகள் சாப்பிடாத பச்சை இலை, தழைகளைப் போடணும். இது நைட்ரஜன் சத்துக்காக.அடுத்ததா, சாம்பல், சுண்ணாம்புத் தூள் ரெண்டையும் கலந்து போடணும். இது தாது சத்துக்களுக்காக அதுக்கு மேல பச்சை தென்ன ஓலைகளை அடுக்கணும். இதுல தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும்.25 நாள் கழிச்சு கம்பால கொத்தி கலக்கி விடணும் மூணு மாசத்துல மண்புழுக்கள் உருவாகி, நல்ல உரமா மாறிடும். இத நேரடியா நிலத்துல கொட்டலாம். விளைச்சல் சிறப்பா இருக்கும்".

May 08, 2023

மாடித்தோட்டம் விதை விதைக்கும் முறை:

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் :- ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும்.வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.உரமிடுதல்- மாடித்தோட்டத்தில் தாவரங்களை வளர்ப்பதற்கு தேவையான அளவு தொழுஉரமும், மண்புழு உரமும் போன்றவற்றை கட்டாயம் இடவேண்டும். மண்புழு உரம் தயாரிப்பு முறை: - மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில் தொட்டியில் குழியில் போட்டு வைக்கவும்.கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.

May 02, 2023

ஆர்கானிக் - இயற்கை விவசாயம்

எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுவதுதான் ஆர்கானிக் விவசாயம். இதில் இயற்கையான உரங்கள், இயற்கையான பூச்சிக்கொல்லிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படும். எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுவதுதான் ஆர்கானிக் விவசாயம். இதில் இயற்கையான உரங்கள், இயற்கையான பூச்சிக்கொல்லிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படும்.ரசாயனங்கள் பயன்படுத்துவதால், உடல் ஆரோக்கியத்திற்காக உண்ணும் உணவே நம் உடல் நலனிற்கு கேடாக மாறிவிடுகிறது. இதைத் தவிர்த்து இயற்கையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி இயற்கையான முறையில் செய்வதே ஆர்கானிக் விவசாயம்.இன்று ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பது முக்கியமாகிவிட்டது. ஏனெனில், இன்று வணிக நோக்குடன் உற்பத்தியை அதிகரிக்க, ரசாயனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி விளைவிக்கப்படும் காய்கறிகள் அல்லது பழங்களை சாப்பிடும்போது உடல்நலன் பாதிக்கப்படுகிறது.இயற்கை விவசாய முறையில் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கையான உரங்கள் பயன்படுத்தப்படும். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும். இப்படி இயற்கையான முறையில் உரமிட்டு உற்பத்தியாகும் விளைபொருட்களை சாப்பிடும்போது,உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. அத்துடன் மண்ணிற்கும் நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.உரமிடுவதற்கு எப்படி ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறோமோ அதேபோல் வேப்பெண்ணெய், கோமியம், மஞ்சள், சாம்பல், பூண்டு, துளசி போன்ற இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவேண்டும். ரசாயன பயன்பாட்டுடன்கூடிய விவசாயத்துடன் ஒப்பிடுகையில் ஆர்கானிக் விளைச்சல் விலையுயர்ந்தவையாகவே இருக்கும். இதற்குக் காரணம் ரசாயன உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்கள் விலையுயர்ந்தவை. ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே ஆர்கானிக் விளைச்சல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Apr 24, 2023

வீட்டு மாடித் தோட்டத்தில் வெங்காயம் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம்.GrowBags அல்லதுThottiஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா,.விதை வெங்காயம் அல்லது விதைகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.வெங்காயம் வளர்வதற்கு சற்று அகலமான தொட்டி அல்லது பை தேவைப்படும்.இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.10 நாட்களுக்கு பிறகு விதைக்க வேண்டும்.பைகளில் நிரப்பும் போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது. வீட்டு  மாடித் தோட்டத்தில்  வெங்காயம் பயிரிடும் முறைவிதை வெங்காயத்தை நேரடியாக ஊன்றலாம் . விதைகளை முதலில் குழிதட்டில் விதைத்து, பின் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும்.இதன் இடைவெளியானது தேர்வு செய்யும் பைகளை பொறுத்து மாறுபடும். விதையை சிறிது ஆழத்தில் ஊன்ற வேண்டும். வெங்காய நாற்றுகளின் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் எடுத்து நட்ட பிறகு எளிதாக வேர் பிடித்து வளர்ந்து விடும்.விதை வெங்காயத்தை ஊன்றிய உடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளாக இருந்தால் ஊன்றியவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு சாணத்தை கரைத்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.இதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது. வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய்3 மிலி(ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் காணப்பட்டால் கட்டுப்படுத்தப்படும்.நாற்று மூலம் நட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம். வெங்காயத்தை நேரடியாக விதைக்கு போது இரண்டு-இரண்டரை மாதத்திலேயே விளைச்சல் எடுக்கலாம். செடியின் பச்சை நிறம் போய், லேசாய் பழுப்பாக ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வெங்காயம் செடியின் மேல்பரப்பிலேயே தெரியும். அதையும் கொஞ்சம் கவனித்து, நல்ல திரட்சியாக தெரியும் போது அறுவடை செய்ய வேண்டும். ஒரே தடவையில் மொத்தமாய் அறுவடை செய்ய வேண்டியதில்லை. நல்ல திரட்சியான வெங்காயத்தை மட்டும் அறுவடை செய்துவிட்டு மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றி வந்து இரண்டு வாரம் கழித்து மிச்ச செடிகளை அறுவடை செய்யலாம். 

Apr 17, 2023

உற்சாகம் தரும் வீட்டுத்தோட்டம் 

அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் ஜன்னலோரங்கள், பால்கனி போன்ற இடங்களில் செடிகளை வளர்க்கலாம். தனிவீடு உள்ளவர்கள், மொட்டை மாடிகளில் மண் தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள் மூலம் வளர்க்கலாம். வாடகை வீடுகளில் உள்ளவர்கள், காம்பவுண்ட் சுவர்களில் கீரைகளை வளர்க்கலாம். வேலி போன்று படல் அமைத்து, அதில் கொடி வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். வீட்டைச் சுற்றி காலி இடம் இருப்பவர்கள், நேரடியாக மண்ணில் விவசாயம் செய்யலாம்’ இப்படி இடத்திற்கு ஏற்ப வளர்க்கலாம்.வீட்டுத்தோட்டம் அமைப்பதன் மூலமாக, மாதந்தோறும் காய்கறிகளுக்குச் செலவிடும் தொகையை கணிசமான அளவுக்குக் குறைக்கலாம். வீட்டுத் தோட்ட செடி, கொடிகளைப் பராமரிப்பதால் உடல் உழைப்பு மட்டுமல்லாமல், மனதுக்கும் இதம் சேரும். இல்லங்கள்தோறும் தோட்டம் அமைத்து, உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகம் தரும்.

Apr 10, 2023

மாடி தோட்டம் போடுபவர்கள்  செடிகளை பராமரிக்க சில குறிப்புகள்

மாடி தோட்டம் போடுபவர்கள் என்றில்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய இடங்களிலும், தொட்டியில் காய்கறி செடிகளை வைத்து பராமரிப்பார்கள். சிலர் மொட்டை மாடியில் சிறிய அளவில் கார்டன் போல் பழங்கள், காய்கறிகள் என்று தொட்டியில் பயிரிட்டு வளர்ப்பார்கள். வயலாக இருந்தாலும் தொட்டியில் இருந்தாலும், செடிகளில் பூச்சி அரிப்பது நடக்க கூடியதுதான்.இதை தவிர்க்க செடி வைக்கும் போதேசரியான மண் பயன்படுத்த வேண்டும். வெறும் மண்ணை மட்டும் எடுக்க கூடாது. இது அதிக எடை கொண்டிருப்பதால் தொட்டியின் கனம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மாடிதோட்டம் போடுபவர்கள் வெறும் மண்ணை மட்டும் பயன்படுத்தவே கூடாது.செடி வைக்கும் போது நான்கில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு கோகோ பீட் என்று சொல்லகூடிய தேங்காய் நார் துகள்கள், ஒரு பங்கு மக்கிய உரம், ஒரு பங்கு ஆற்று மணல் என்று நான்கையும் சம அளவு கலந்து பயன்படுத்த வேண்டும். தேங்காய் நார் துகள்களை இரண்டு முறை நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.செடிகளுக்கு செம்மண் எப்போதும் சிறந்தது என்றாலும் அந்த மண் கிடைக்காத நிலையில் மண்ணை வளப்படுத்த சில முறைகள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பகுதியில் கிடைக்கும் மண்ணை எடுத்து, அதில் இருக்கும் பெரிய கற்களை அகற்றி, மண்ணை சுத்தம் செய்யவும். பிறகு அதை பயன்படுத்த வேண்டும்.செடி வைக்கும் போதே, மண்ணில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு பொடியை கலந்து விட்டால் விதைகளோ, வேரோ நன்றாக பற்றிக்கொள்ளும். மண்ணுக்கு சமமாக மணல் சேர்ப்பது நல்லது. இல்லையெனில் ,இது வேர்பகுதியை இருக்கி கட்டியாக்கிவிடும்.கீரைகளோ, காய்கறிகளோ, பழச்செடிகளோ அதற்கேற்ப மண்ணை நிரப்ப வேண்டும்.  சிறிதாக செடிகளை வளர்க்க செய்யலாம். அப்போதுதான் எல்லாவற்றையும் கவனமாக பராமரிக்க முடியும். செடிகள் பட்டு போகாமல் பார்க்கமுடியும். இந்த குறிப்புகளை கவனமாக கடைப்பிடித்தாலே செடிகள் அருமையாக வளர்ந்திருக்கும். இப்போது செடிகள் வளர, வளர காய்களும், பூக்களும், பழங்களும் நிறைவாக கொடுக்க வேண்டும். அதோடு பூச்சிகளும் செடிகளை பற்றாமல் இருக்க வேண்டும். அதற்கான உரம் தயாரிப்பு குறித்து பார்க்கலாம்.

Apr 03, 2023

பாம்பு செடி

ஒரு மீள்மற்றும் பிரபலமான வீட்டுதாவரமாகும். அதன்பசுமையான வாள்வடிவ இலைகள்நேராக வளர்ந்து கிட்டத்தட்டபோலியானவை என்பதால் இதைக்கண்டறிவது எளிது. பாம்பு தாவரங்கள் வீட்டுதாவரங்களாக பிரபலமாக உள்ளன,  பாம்புதாவர பராமரிப்பு எளிதானது,குறைந்த தண்ணீர்தேவைப்படுகிறது .பாம்பு செடிகள் உட்புற வெளிச்சத்தில் மெதுவாக வளரும், ஆனால் சூரிய ஒளியில் சில மணி நேரம் அவற்றை வெளிப்படுத்துவது அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தும். நடவு மற்றும் இடமாற்றம் செய்ய உகந்த நேரம் வசந்த காலம். இது ஒரு நல்ல அதிர்ஷ்ட தாவரமாகும், ஏனெனில் இது காற்றில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சி, ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சீன் போன்ற விஷங்களை நீக்குகிறது.மிகவும் பொதுவான வகை பாம்பு செடியின் பசுமையானது சாம்பல் அல்லது வெள்ளி கிடைமட்ட கோடுகளுடன் மெல்லிய, பச்சை இலைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆலை பல அடிகளை எட்டும் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் வளரும். நீங்கள் அவற்றை பல வடிவங்களில் காணலாம்,பாம்பு செடியானது6 அங்குலத்திலிருந்து பல அடி உயரம் வரை வளரக்கூடிய கடினமான சதைப்பற்றுள்ள தாவரமாகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்  வழங்குகிறது.பாம்பு தாவரங்கள், மற்ற உட்புற சதைப்பற்றுள்ளவைகளைப் போலவே, காற்றை வடிகட்ட உதவுகின்றன இது ஆரோக்கியமான காற்றோட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.இரவும் பகலும் காற்றை வடிகட்டுகிறது.நச்சு இரசாயனங்களை உறிஞ்சி அகற்றும் திறன் காரணமாக அவை காற்றில் பரவும் ஒவ்வாமைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.பாம்பு செடி பாம்பு செடி சுற்று சூழலில் ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதத்தை நிரப்புகிறது, இதன் மூலம் வீட்டிற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. இது வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கிறது, சுற்றுச்சூழலை ப்ரெஷாகவும், அழகாகவும் மாற்றுகிறது எந்த திசையில் வைக்க வேண்டும்: போதுமான வெளிச்சம் மற்றும் நேரடி சூரிய ஒளி படாத வகையில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கவும்.

Mar 27, 2023

மல்லிகை பூ

.இந்த செடி ஒரு தனித்துவமான இனிமையான வாசனையுடன் மனதைக் கவரும் அழகான சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது. இதன் இனிமையான மற்றும் புதிய நறுமணம் மனநிலையை இலகுவாக்குகிறது மற்றும் வீட்டின் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை வழங்குகிறது. எந்த திசையில் வைக்க வேண்டும்: காலை மற்றும் மாலை சூரிய ஒளி மட்டும் படும் வகையில் வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.  மல்லிகை சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மல்லிகை மல்லி பூ மற்றும் குண்டுமல்லி பூ. இவை ஒரு குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். அதுவும் ஜூன் முதல் நவம்பர் மாதங்கள் மட்டுமே நடவு செய்யலாம். 30 செ மீக்கு, 30 செமீ என்ற அளவில் குழி வெட்ட வேண்டும். 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு ஏக்கருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.மல்லிகை பூ அதிகம் பூக்க செடிக்கு உரமாக 10 கிலோ சாணமும் தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தில் காவந்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் உரமாக இட வேண்டும் நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ உயரத்தில் செடிகளை நடவு செய்ய வேண்டும்.

Mar 13, 2023

துளசி

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவரும்.  துளசி இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் எளிதில் கிடையக்கூடிய ஒரு பயனுள்ள தாவரமாகும். இது புராணக்காலம் முதலே முனிவர்களாலும், மக்களாலும் வழிபடப்பட்டு வருகிறது. இது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது மனதை அமைதிப்படுத்துகிறது , மகிழ்ச்சியையும் பரப்புகிறது. .மேலும் இதில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதை நமது வீட்டின் சுற்றுப்புறத்தின் வைத்தால் போதுமானது. எந்த திசையில் வைக்க வேண்டும்: வீட்டின் "பிரம்ம ஸ்தானம்" என்றும் அழைக்கப்படும் வீட்டின் மையத்தில் இதனை வைக்க வேண்டும். ஒருவேளை அங்கு வைக்க முடியவில்லை என்றால், வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் காலை சூரிய ஒளி படும் வகையில் வைக்கலாம். துளசியை தெற்கு திசையில் வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அசுபமாக கருதப்படுகிறது மற்றும் இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை ஊக்குவிக்கும்.

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News