25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வேளாண்மை

Jan 08, 2024

கொத்தமல்லி தழையை வீட்டிலேயே எப்படி வளர்க்கலாம்?

உணவுக்கு சிறந்த சுவையைத் கொத்தமல்லி தரும். இதை வீட்டிலேயே ரசாயனங்கள் இல்லாமல் பயிரிடலாம்.15,20 நாட்களில் உங்கள் மொட்டை மாடியில் அல்லது உங்கள் தோட்டத்தில் கொத்தமல்லியை வளர்க்கலாம்.1 பங்கு வண்டல் மண்,1 பங்கு உரம்(வெர்மி கம்போஸ்ட், மாட்டு சாணம், இலை உரம்) மற்றும் ஒரு கைப்பிடி வெள்ளை மணல் ஆகியவற்றை கலக்கவும். பானை அல்லது தொட்டியை எடுத்து, அதிகப்படியான நீர் வெளியேறதொட்டியில்ஒரு துளைசெய்து,அதன்மீது சில சிறியகற்களை பரத்தினால். அதிலிருந்து மண் வெளியே வராது. பின்னர் மேலே மண்ணை தூவவும். வீட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி விதைகளையும் நடலாம். கொத்தமல்லி விதைகளை ஒரு துண்டில் போட்டு, அதை இரண்டாகப் பிரிக்க கடினமான ஒன்றை அழுத்தவும் மல்லி விதை இரண்டாகப் பிரியும் ரெம்பவும் நொறுக்கி விடக்கூடாது. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.விதைகளை மறுநாள் காலையில் தயாரிக்கப்பட்ட மண்ணில் சமமாக பரப்பவும். கொஞ்சம் பரவலாக விதையைத் தூவ வேண்டும். நெருக்கி விதைக்கக் கூடாது பிறகு லேசாக மேலே மண்ணைதூவ வேண்டும். தண்ணீர் பாய்ச்சினால், விதைகள் மண்ணில் மிக ஆழமாகச் சென்று விடும் எனவே இந்த நேரத்தில் மண்ணுக்கு மிக லேசாக தண்ணீர் விடுவது அவசியம். மண் எப்பொழுதும் ஈரமாக இருப்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.-10 நாட்களில் சிறிய நாற்றுகள் வெளிவர ஆரம்பிக்கும். நாற்றுகள் ஒன்றன் மேல் ஒன்றாக வளர்ந்தால் சிலநாற்றுகளை கையால் எடுத்து விட்டால். தொட்டியில் உள்ள செடிகள் சரியாக வளர வாய்ப்பளிக்கும்.20,25 நாட்களுக்குள் தினசரி உபயோகத்திற்கு கொத்தமல்லி இலைகளை பறிக்கலாம். மார்ச் வரை மொட்டை மாடித் தோட்டத்தில் கொத்தமல்லி கிடைக்கும். அதன் பிறகு  கொத்தமல்லிதழையைநிழல் தரும் இடத்திற்கு மாற்றினால், ஆண்டு முழுவதும் கொத்தமல்லிதழை கொத்தமல்லி இலைகளை பறிக்கும் போது, அவற்றை ஒருபோதும் தண்டுகளுடன் சேர்த்து பறிக்க வேண்டாம். மாறாக, மேலே இருந்து தேவையான  இலைகளை பறிக்கவும். மீண்டும் மல்லிதழை துளிர்த்து  வளரும் .

Jan 01, 2024

கருணைக்கிழங்கு  சாகுபடி

கருணைக்கிழங்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுள்600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் அதிகம் உள்ளது.இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளைசிவப்பு,கருப்பு போன்ற நிறங்களிலும்,இனிப்பு முதல்,காரம், கசப்பு, கடுமையான புளிப்பு மற்றும் சுவை இல்லாத வகைகளும் உள்ளது. மேலும் உண்ணக்கூடிய மற்றும் விஷ தன்மை கொண்டவைகளும் உள்ளது.கருணைக்கிழகில் இரண்டு வகைகள் உள்ளதுகாரும் கருணைகாராக் கருணை என்று அழைக்கபடுகிறது . இந்த இரண்டு வகைகளும் உணவாக பயன் படுத்தப்  படுகிறதுஜூன்,ஜூலைமற்றும்பிப்ரவரி,மார்ச்மாதங்கள்  சாகுபடிசெய்ய உகந்த மாதங்கள் முதலில் நிலத்தை நன்றாக உழுது,பின்வயலில்அரைஅடிக்குதண்ணீர்தேக்கி,தழைச்சத்தாக பசுந்தாள் பயிர்கள் சாகுபடிசெய்து அந்த செடியை மிதித்து மட்க செய்ய வேண்டும் .பின்பு ஒரு ஏக்கருக்கு ,   மக்கிய இலைகள், ஆடு ,எருமை , பசுமாட்டு சாணம் போன்றவற்றுடன் தொழு உரம் ஒரு டன் இட்டு, ஆழ புழுதி உழவு செய்து பரம்படிக்கும் போது நிலதிருக்கு தேவையான அடியுரம் கிடைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிலம் நல்ல முறையில் சாகுபடி செய்ய பண்பட மண் வளமுடன் இருக்கும் . ஒரு ஏக்கருக்கு30 முதல் 35 ஆயிரம் விதை கிழங்கு தேவை படும். இதனை வாங்கி, பாதுகாப்பாக ஈரமில்லாத, காற்று புகாத அறையில்வைத்து இருக்கவேண்டும்பின்பு விதை கிழங்குகளில் முளை கட்டியவுடன், நிலத்தில் அரை அடிக்கு ஒரு விதை கிழங்கு என்று நடவு செய்ய வேண்டும்.குறைவான நீர்பாசனவசதிகொண்டநிலங்களில்சொட்டுநீர் பாசனமுறை மூலம் பயிர் செய்யலாம்இந்த வகை நிலங்களுக்கு கருணை ஒரு மிக சிறந்த ஒன்றாகும்இது ஒன்பது மாதம் வயது கொண்ட பயிர் ஆகும் .இது பயிரிட்ட நாளில்  இருந்து ஒரு மாதம் கழித்து முளைகுருத்து நிலத்தில் தெரியும். இப்படி முளைக்கும் பருவத்தில் குறைந்தது 5 முதல் 6 நாட்கள் ஒருமுறை மன்ணின தன்மை பொருத்து நீர் பாசனம் செய்வது நன்மை பயக்கும். இப்படி மண்ணிண் ஈரப்பதம் காரணமாக களைகள் வரும் அதனை களை எடுத்து பராமரிக்கவேண்டும் .ஒரு மாதத்திற்கு ஒரு முறை  ஐந்து மூட்டை, கடலை புண்ணாக்கு, மூன்று மூட்டை வேப்பம் புண்ணாக்கு இயற்கை உரம்  இடவேண்டும் இதன் காரணமா பயிருக்கு தேவையான  சத்துக்கள் நிலத்தில் அதிகரிக்கும். ,மண்புழு உரம்  கிடைத்தால் ஒவ்வொரு செடியின் வேர்  பகுதியில்  30 கிராம் வீதம் கொடுத்தல் நன்கு வளர்ச்சியில் மாற்றம்  தெரியும் . இதன் மூலம் கிழங்கின் அளவும் எடையும் அதிகரிக்கும் .இவ்வாறு கொடுக்கும் பொழுது  வேர்பகுதில் மண்ணை வெட்டிபின்பு மண் அணைக்க வேண்டும்9 மாதம் கடந்த பின்பு பக்குவம் பார்த்து அறுவடை செய்யலாம். இது குறிப்பாக ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7டன் வரை கிடைக்கும் .

Dec 25, 2023

மருத்துவ செடிகளை வளர்த்துலட்சக்கணக்கில்சம்பாதிக்கலாம்.

தாவரங்களை பயிரிடும்போது அதற்கு ஏற்ற லாபத்தை விவசாயிகள் பெறுகின்றனர். சில மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு மானியத்தை வழங்குகிறது. மேலும், இதில் நல்ல லாபத்தை பெறலாம்.விவசாயிகளுக்கு வருவாயை உருவாக்கித்தரும்இயற்கையானமருத்துவதாவரங்கள் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுகிறது.. இந்த தாவரங்கள் மருந்து, ஒப்பனை பொருட்கள் மற்றும் மருந்துத் துறையில் பயன்படும் மூலப்பொருட்களை வழங்குகின்றன. பிற பாரம்பரிய மற்றும் வணிக பயிர்களுடன் ஒப்பிடும்போது, நறுமணம் மற்றும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்ப்பதன் வாயிலாக நல்ல வருவாயை விவசாயிகள் ஈட்ட முடியும்.இதன் விளைவாக, வளர்ந்து வரும் விவசாயிகள் இதுபோன்ற தாவர வகைகளை பயிரிடுவதற்கு ஈர்க்கப்படுகிறார்கள். கூடுதலாக, இந்திய தேசிய மருத்துவ ஆலை வாரியம் குபடி செய்யும் வெவ்வேறு தாவர இனங்களின் அடிப்படையில்30 சதவீதம் முதல்75 சதவீதம் வரை மானியங்களை வழங்குகிறது. இந்த வணிக யோசனை திட்டத்தில், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அஸ்வகந்தா செடியின் வேர்கள் இந்தியாவில் இரண்டு முக்கிய பாரம்பரியமருத்துவமாகப் போற்றப்படும் ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றில் பெரிதளவு பயன்படுத்தப்படுகின்றன. அஸ்வகந்தா தூள், மாத்திரைகள் ஆகியன அதன் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் ஆகும். இலைகள் கருகி உதிர்ந்து போகத் தொடங்கும் போது, அதில் இருக்கும் பழங்கள் மஞ்சள்சிவப்பு நிறமாக மாறும் போது அறுவடை முதிர்ச்சியடைகிறது. விதைத்த150,180 நாட்களுக்குப் பிறகு, இந்த பயிர் அதன் வேர்களுக்காக அறுவடை செய்யப்படுகிறது. அஸ்வகந்தா சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு சுமார் ரூ.12,000 முதல்14,000 ரூபாய் வரை செலவாகும். அறுவடைக்கு பின் சுமார் ரூ.60-70 லட்சம் வரை இவை விற்கப்படுகிறது.குல்கைரா சாகுபடி என்பது ஒரு புதுமையான முயற்சியாகும். இது இழப்புகளை மட்டுமல்லாமல், லாபகரமான வருமானத்தையும் உறுதி செய்கிறது. வழக்கமான க்கு இடையில் ஊடுபயிராக குல்கைராவை விதைப்பதன் மூலம், நீங்கள் ஒரு நல்ல யைப் பெற முடியும். குல்கைரா பூக்கள், இலைகள், தண்டுகள் மற்றும் விதைகளில் வ சந்தையில் நல்ல மதிப்பை பெற்றுள்ளன. இதன் வாயிலாக ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வருவாய் ஈட்ட முடியும்.குறைந்த முதலீட்டு,அதிகவருவாய்தரும்வணிகமுயற்சியைஉருவாக்குவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், தைரியமான லெமன்கிராஸ் சாகுபடி செய்யலாம். இது நான்கு மாதங்களில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகிறது. அழகுசாதனப் பொரு ட்கள், சோப்புகள், எண்ணெய்கள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு இது மூலப்பொருளாக உள்ளது. ரூ.20,000 என்ற குறைந்த முதலீட்டில் தொடங்கும் இந்த"விவசாயத்தின் வாயிலாக ஆண்டுக்கு ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை லாபத்தை ஈட்டலாம்.அஸ்பாரகஸ் வகையில் உள்ள மூலிகைத் தாவரமான சதாவரி, விவசாயிகளுக்கு நிலையான வருமானத்திற்கான கதவுகளை கொண்டுள்ளது. இது ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. தாவரத்தின் உலர்ந்த வேர்கள் மருந்துகளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கர் சதாவரி சாகுபடியின் வாயிலாக ரூ.6 லட்சம் வரை வருவாயை ஈட்டமுடியும்.ஜெரேனியத்தைநாம்குறைந்தசெலவில்வளர்க்கமுடியும்.ஜெரேனியம்செடியில் இருந்து கிடைக்கும் பூக்களைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அரோமாதெரபி, அழகுசாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை சோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. ஊடுபயிராகவும் இதை பயிரிடலாம் என்பதுதான் சிறப்பு. மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இதை அறுவடை செய்யலாம். ஒரு லிட்டர் ஜெரேனியம் எண்ணெய் சந்தையில் ரூ.20,000 வரை மதிப்பைக் கொண்டுள்ளது.

Dec 11, 2023

காரட் வளர்க்கும் முறை

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.காய்கறிகளில் மிக முக்கியமானது இந்த கேரட். இந்த கேரட்டை நிறைய பேர்களுக்கு பச்சையாக சாப்பிட பிடிக்கும். ஆனால் செயற்கை உரங்கள் மூலம் விளைவித்த காய்கறிகளை பச்சையாக உட்கொண்டால் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இந்த ருசியான கேரட்டை வீட்டிலேயே வளரச் செய்ய நம்மால் முடியும்.ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பியோ அல்லது நேரடியாக நிலத்திலோ இதை வளர்க்கலாம். இப்பொழுது கேரட் விதைகளை இந்த மண்ணினுள் வைத்து மூடி விடுங்கள். கேரட் விதைகள் எளிதாக மார்க்கெட்டில் கூட கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு நீங்கள் ரெம்ப பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கேரட் சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 30 நாட்களில் பாருங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் கண்ணை கவரும் கேரட் ரெடியாகி இருக்கும்..

Dec 04, 2023

வீட்டு தொட்டியில் தக்காளிச் செடி .

.சமையலறையில் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள் தக்காளி. சமையலுக்கு பயன்படுத்த கூடிய இந்த அத்தியாவசியமான பொருளை, நம் வீட்டில் வளர்த்து, நம் வீட்டுத் தொட்டியில் இருந்து, அறுவடை செய்து, சமைத்தால் எப்படி இருக்கும்? அதிகமாக சிரமப்பட வேண்டாம். சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய தொட்டியிலேயே, ஒரு தக்காளி செடியை வளர்க்க லாம்.பழுத்த நாட்டு தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வடிவில் நறுக்கிக் கொண்டால்,4 லிருந்து5 பீஸ் கிடைக்கும். அதை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ளவேண்டும். பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் சரி. மண்தொட்டியாக இருந்தாலும் சரி. அந்தத் தொட்டியில், முதலில் அடிபாகத்தில், உங்கள் வீட்டில் தேங்காய் உரிக்கும் நார் இருந்தால், அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். அதன்பின்பு60 சதவிகிதம் கருப்பு மண் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் அல்லது செம்மண் எடுத்துக்கொள்ளுங்கள்.40% மண்புழு உரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து தொட்டியில் சேர்க்கவேண்டும். தொட்டியில் சேர்க்கபோகும் மண் உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பாக நீங்கள் வெட்டி வைத்திருக்கும் வட்டவடிவ தக்காளி துண்டுகளை, கொஞ்சம் இடைவெளி வைத்து தொட்டியில் அடுக்கி விடுங்கள். தக்காளியில் இருக்கும் விதை தனியாக வந்திருந்தால் அந்த விதையையும் சேர்த்து இந்த தொட்டியிலேயே போட்டுவிடுங்கள். இந்த தக்காளி வெளியே தெரியாத அளவிற்கு, மேலே ஒரு லேயர் அளவு கருப்பு மண்ணை தூவி விடுங்கள். தடிமனாக தூவி விட்டு விடக்கூடாது. ஒரு இன்ச் அளவு தடிமனாக தூவினால் மட்டும் போதும். தூவிவிட்டு, அந்த மண்ணை, கைகளால் போட்டு அமைக்கக் கூடாது. அதன் பின்பாக மேலே இருக்கும் மண் நன்றாக நனையும் அளவிற்கு தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும். அதாவது தெளிக்க வேண்டுமே தவிர, ஒரே இடத்தில் தண்ணீரை ஊற்றி விடக்கூடாது. - தினமும் காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் தெளிக்க வேண்டும். கொஞ்ச நேரம் இந்த தொட்டியை வெயிலில் வைப்பது நல்லது. பத்து நாட்களில் நன்றாக துளிர்விட ஆரம்பித்துவிடும். பதினைந்தாவது நாள் துளிர்விட்ட அந்த தக்காளிச் செடியை, வேரோடு சேதமடையாமல் எடுத்து மற்றொரு தொட்டிக்கு மாற்றி பதியம் போட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரே தொட்டியில் நிறைய செடிகள் வேரூன்றி வருவது கஷ்டமாக இருக்கும் என்பதால் தொட்டியை மாற்றி வைப்பது நல்லது. புதிய தொட்டியின் செடியின் வேர் உள்ளே செல்லும் அளவிற்கு, பள்ளம் தோண்டி, வேரோடு பிடுங்கிய ஒரு செடியைப் பதியம் போட்டு விட்டீர்கள் என்றால், அந்த செடி மீண்டும் வேரூன்றி வளர ஆரம்பித்துவிடும். குறைந்தது 50 லிருந்து 55 நாட்களுக்குள் செடி ஓரளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். பூ வைக்க தொடங்கிவிடும். பத்து நாட்களுக்கு ஒருமுறை ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரையும், மண்புழு உரத்தையும் இந்த செடிக்கு சேர்த்து வருவது அதிகப்படியான பூ விட்டு, அதிகப்படியான காய் காய்த்து, அதிகப்படியான தக்காளி பழங்களை அறுவடை செய்ய உதவியாக இருக்கும். செடி வைத்த90 நாட்களில் சரியான ஊட்டச்சத்து செடிக்கு கிடைத்திருந்தால், நீங்கள் தக்காளி பழங்களை அறுவடை செய்யலாம். ஒரு சில பேரது வீட்டில் செடி பக்கவாட்டில் வளர்ந்து, கீழே தாழ்வாக தொங்கும். அப்படிப்பட்ட கிளைகளை நாம் தூக்கி நிறுத்தி, ஒரு கயிறால் கட்டவேண்டும். அதாவது உங்கள் தொட்டியிலேயே கட்டையை சொருகி வைத்து, அந்த கட்டையில், முட்டுக்கொடுத்து கிளைகளை இலேசாக கட்டி விடுங்கள். அப்போது உங்களது கிளைகள் கீழே சாயாமல் இருக்கும். உங்கள் வீட்டில் இரண்டு தொட்டி, ஒரு தக்காளி இருந்தால், மட்டும் போதும். இதை எல்லாவற்றையும் விட செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் வைக்கும் செடியானது, நீங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வளரும் 

Nov 20, 2023

மணி பிளாண்டை பராமரிக்கும் குறிப்புகள்

வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றும் செல்வ செழிப்புடனும் எப்போதும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில் மணி பிளாண்டை வீட்டில் வளர்கின்றனர்.ஒழுங்கான பராமரிப்பு இல்லையேல் நீண்ட காலம் வாழாது..  மணி பிளாண்ட் கன்றுகளை மண்ணுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்.வளர்ச்சி அதிகமானாலும் ஒரு சில மணிநேரத்தில் குறையும். இச்சந்தர்ப்பத்தில் எப்சம் உப்பை சேர்க்கவும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அதை வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே புதிய இலைகள் ஆரோக்கியதுடன் வளர்ச்சி பெறும்.வேகமாக வளர வேண்டுமென்றால், 4 மாதங்களுக்கு ஒரு முறை மண்ணைத் தோண்டி உரம் சேர்த்து வந்தால் வேகமாக வளரவைக்கவும்.நேரடியாக சூரிய ஒளிப்படும் வகையில் வைக்க கூடாது. இவ்வாறு வைத்திருந்தால் அதன் இலைகள் கருகி விடும்.ஈரமான மண் அதிகமாக தேவை. அது தினசரி தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்கிறது. எனவே பருவத்திற்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும்.    

Nov 13, 2023

தென்னை மரத்தில் வெள்ளை ஈக்கள் தொல்லை போக்க..

 தென்னைசாகுபடி செய்யும் விவசாயி கள் முன்னெச்சரிக்கைக்காக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த,வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளம்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. சுமார்20,30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூசணம் படர்ந்து காணப்படும்.வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈமேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையானது பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆனஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை(நீளம்5 அடி அகலம்11/2 அடி) ஏக்கருக்கு10 என்ற எண்ணிக்கையில்,5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து  வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களைக் கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலமாகவும் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தைப் பெருமளவு குறைக்கிறது.என்கார்ஸியா ஒட்டுண்ணிகளானது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.கிரைசோபெர்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும்.இந்த இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது, திருச்சி மாவட்டத்தில் செயல்படும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் உயிரினங்கள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளைக் கண்டிப்பாக தவிர்த்து நன்மை செய்யும் உயிரினங்கள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். 

Oct 30, 2023

கத்தரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க .....

கத்தரிக்காய் செடி வைத்த45 நாட்களில் பூக்கள் வைக்க தொடங்கும் இந்த பூக்களைஉதிராமல்காய்களாகமாற்றஇந்நேரத்தில்அமிலத்தன்மை நிறைந்த கரைசலை கொடுக்க வேண்டும்.புளித்த மோருடன் தேங்காய் பால் கலந்து கத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும். கரைசலாககத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும்தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், மோர் பெருங்காயத்தூள் கரைசல் என உங்களிடம் எந்த கரைசல் உள்ளதோ அதனை தெளிக்கலாம்.இவ்வாறு நீங்கள் கத்தரிக்காய் செடி பூக்கள் பூக்கும் நேரத்தில் தெளிப்பதன் மூலம் பூத்த பூக்கள் அனைத்தையும் காய்களாக மாற்றலாம்., காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீரை அதன் வேர்பகுதிகளில் ஊற்றி வேண்டும்.மண்புழு உரத்தினை அதன் வேர்பகுதிக்கு மேல் போட்டு கிளறி விடுவதன் மூலம் கத்தரிக்காய் செடி செழித்து வளரும்.கத்தரிக்காய் பெரியதாகவும் பூச்சி இல்லாமலும் வளர கடலை புண்ணாக்கு மற்றும் வேப்ப புண்ணாக்கு கலந்த கரைசலை கொடுக்க வேண்டும்முதலில் 5% கடலை புண்ணாக்கு மற்றும்25% வேப்பம் புண்ணாக்கை எடுத்து கொள்ளுங்கள் இதனை ஒரு வாளியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளுங்கள்.இது நன்கு ஊறிய பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் செடியில் புழுக்கள், எறும்புகள் போன்றவை வராமல் இருக்கும்

Oct 23, 2023

பூசணி சாகுபடி

தமிழர்களின்பாரம்பரியஉணவுமுறைகளில்பயன்படுத்தப்படும்காய்கனிகளில் பூசணி  வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற அதிகளவில் உணவுதயாரிக்கும் இடங்களில் பூசணிவகைகளைப் புறந்தள்ள முடியாது.சாம்பல்பூசணியில் கோ 1, கோ 2 ஆகிய ரகங்கள்உள்ளன.நல்லஆழமான இருமண்பாட்டு நிலத்தில்சாம்பல் பூசணி நன்குவளரும்.மானாவாரியில்பயிரிட களிமண் கலந்தநிலம் சிறந்தது.சாம்பல்பூசணியின் வளர்ச்சிக்குஅதிக குளிரில்லாத, ஓரளவுவெப்பமான பருவநிலைமிகவும் உகந்தது.சிறந்தமகசூலுக்கு காரஅமிலத் தன்மை 6.5 – 7.5 இருத்தல் வேண்டும்.ஜனவரி,  ஜூலை மாதங்களில் விதைக்கலாம்.விதையளவு:ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதைகள் தேவை.விதைக்கும்முன்னர் கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீர் என்றவிகிதத்தில் அரைமணிநேரம் ஊறவைத்து, 6 நாள்கள்வைத்திருந்து பிறகுவிதைக்க வேண்டும்.நிலத்தை 3 முதல் 4 முறை நன்குஉழுத பின்னர் 2 மீட்டர்இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள நீண்டவாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.இந்தவாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ. நீள, அகல,  ஆழக் குழி பறிக்கவேண்டும்.2 x 1.5 மீட்டர் (வரிசைக்கு வரிசை 2 மீட்டர் செடிக்குச் செடி 1.5 மீட்டர்) இடைவெளி விட்டுவிதைக்க வேண்டும்.குழிக்கு 3 – 6 விதைகள் நட்டு, முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டுமற்றவற்றை நீக்கவேண்டும்.குழிஒன்றுக்கு 10 கிலோதொழு எரு மற்றும்கலப்பு உரம் (6:12:12) தழை: மணி: சாம்பல்சத்து), 100 கிராம் இட்டுநீர் பாய்ச்ச வேண்டும். 30 நாள்களுக்கு பின்புகுழிக்கு 10 கிராம்யூரியா என்ற அளவில்மேலுரம் இடவேண்டும்.இப்கோகாம்ப்ளக்ஸ், யூரியாபோன்ற உரங்களை வேளாண்துறையினரின் ஆலோசனைப்படிபயன்படுத்தலாம்.நீர் நிர்வாகம்:பூசணிவிதைகளை விதைக்கும் முன்குழிகளுக்கு நீர்பாய்ச்ச வேண்டும்.விதைத்தஅடுத்த நாள் கண்டிப்பாகநீருற்ற வேண்டும்.பிறகு 3-ம் நாள் உயிர்த்தண்ணீர் ஊற்ற வேண்டும்.முளைப்புத்திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம்ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.பின்செய்நேர்த்தி:செடிகளைச்சுற்றி 15 நாள்களுக்கு ஒருமுறைகளைக்கொத்தியால் களையெடுக்கவேண்டும்.கொடிகளைவாய்க்காலில் படரவிடாமல்அவ்வப்போது எடுத்துஇரண்டு வாய்க்கால்களுக்கு இடைப்பட்டநிலப்பரப்பில் படரச்செய்ய வேண்டும்.விளைச்சல்அதிகரிக்க விதைத்த 15 ஆம் நாளில் 10 லிட்டர்நீருக்கு 2.5 மில்லிஎன்ற அளவில் எதிரில்என்னும் வளர்ச்சி ஊக்கியைநான்குமுறை ஒருவார இடைவெளியில் தெளிக்கவேண்டும்.இதனால்கொடிகளில் பெண்பூக்கள் அதிகம் தோன்றி,  அதிகக் காய்கள் பிடித்துவிளைச்சல் அதிகரிக்கும்.பயிர்ப் பாதுகாப்பு:பூசணியில்வண்டுகளின் தாக்குதலைக்கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி அல்லது டைமெத்தோயேட்ட 1 மில்லி அல்லது மீதைல்டெமட்டான் 1 மில்லிமருந்து இவற்றுள் ஏதேனும்ஒன்றுடன் 1 லிட்டர்தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.பழஈக்களைக் கட்டுப்படுத்தமாலத்தியான் 1 மில்லிமருந்தை 1 லிட்டர் நீரில்கலந்து தெளிக்க வேண்டும்.பழஈ தாக்கப்பட்ட பழங்களைச்சேகரித்து அழிக்கவேண்டும்.  பழ ஈக்களின் தாக்குதல்கோடைக்காலத்தில் குறைவாகவும்,  மழைக்காலங்களில் அதிகமாகவும்காணப்படும். எனவேஇதை அனுசரித்து பயிரிடவேண்டும்.எக்காரணத்தைக்கொண்டும், டிடிசி,  பிஎச்சி, கந்தகம், தாமிரத்தைக்கொண்ட பூச்சி, பூசணக்கொல்லிமருந்துகளைத் தெளிக்கக்கூடாது.இது,  கொடிக்கு ஆபத்தைவிளைவிக்கும். சாம்பல்நோயைக்கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.அறுவடை:காய்கள்முற்றிய நிலையை அவற்றின்மேல் பரப்பில் உருவாகும்சாம்பல்போன்ற பொருள்உதிரத் தொடங்குவதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.விதைத்த 90ஆம் நாளிலிருந்து காய்களைஅறுவடை செய்யலாம்.சாதாரண வெப்ப நிலையில்காய்களை நல்ல காற்றோட்டமானஅறைகளில் ஒன்றின்மேல்ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டுசேமிப்பதன் மூலம் 4முதல் 5 மாதங்கள்வரை பாதுகாக்கலாம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oct 16, 2023

சூரியகாந்தி சாகுபடி

கார்த்திகை பட்டத்தில் மானாவாரி பயிராக கோ.4,மார்டன் ஆகியசூரியகாந்தி இரகங்களும் வீரியஒட்டு இரகங்களில் கே.பி.எஸ். எச்.1, கே.பி.எஸ்.எச்.44, டி.சி.எஸ்.எச்.1 ஆகியவை சூரியகாந்தி இரகங்களும் ஏற்றவை.மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக பயிரிட கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44, எம்.எஸ்.எப். எச்.17 ஆகியவை ஏற்றவை.விதையளவு : கிலோ / ஹெக்டேர்.இரகங்கள் – மானாவாரி 7, இறவை 6வீரியஒட்டு இரகங்கள் – மானாவாரி 5, இறவை 4விதை நேர்த்திஒருகிலோ விதைக்கு2 கிராம்கார்பன்டைசிம் அல்லது4 கிராம் டிரைகோடெர்மா விரிடிகொண்டு பூஞ்சாண விதைநேர்த்தி செய்யவும்.விதைப்பதற்குமுன் ஒரு ஹெக்டேருக்கானவிதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டுவிதை நேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில்உலர வைத்து விதைக்கவும்.விதைப்புஒருகுழிக்கு இரண்டுவிதை என்ற அளவில்3 செ.மீ. ஆழத்தில்பாரின் பக்கவாட்டில் விதைக்கவும்.பின்பு10ஆம் நாள் செழிப்பாகஉள்ள ஒரு செடியைநிறுத்தி, மற்றதை களைத்துவிடவும்.பயிர்இடைவெளி: வீரிய ஒட்டுஇரகங்கள் – 60 செ.மீ. x 30 செ.மீ.,  இரகங்கள் – 45 செ.மீ. x 30 செ.மீ.களை நிர்வாகம்ப்ளுக்குளோரலின் விதைத்த5 ஆம்நாள் அல்லது பென்டிமெத்தலின் விதைத்த3 ஆம்நாள்2 லிட்டர்/ ஹெக்டேருக்குதெளித்தபின் நீர்பாய்ச்சுதல்வேண்டும்.களைக்கொல்லிஇட்டபின் 30-35 ஆம்நாளில் ஒரு கைகளை எடுக்க வேண்டும்.  களைக்கொல்லி பயன்படுத்தாதநிலையில் விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாள்கை களை எடுக்கவேண்டும்.உர நிர்வாகம்ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம்அடியுழவில் இடவும்.இரசாயனஉரங்களில் வீரியஒட்டு இரகங்களுக்கு இறவையில்ஹெக்டேருக்கு 60:90:60 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.இரகங்களுக்குஇறவையில் ஹெக்டேருக்கு60:30:30 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும், மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.உயிர் உரம் இடுதல்ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியாவை 25 கிலோதொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்துவிதைக்கு முன்இடவும்.நுண்ணூட்ட உரம் இடுதல்எக்டேருக்கு 12.5 கிலோ சூரியகாந்தி நுண்ணூட்ட உரக் கலவையை 40 கிலோமணலுடன் கலந்து விதைப்பதற்குமுன் சாலில் இடவும்.மணிகள் பிடிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்இடைக்காலபூக்கும் பருவத்தில்மகரந்த சேர்க்கைக்காக காலை9.00 மணி முதல்11.00 மணிக்குள்கையில் மெல்லிய துணிகொண்டு பூவின் மேல்பாகத்தைஇரண்டு நாட்களுக்கு ஒருமுறைமெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையும்தேய்க்க வேண்டும்.எட்டிலிருந்துபத்து நாட்களுக்கு ஐந்துமுறை இவ்வாறு செய்யவேண்டும். அல்லதுஅருகருகே உள்ளபூக்கொண்டைகளை ஒன்றோடுஒன்று முகம் சேர்த்துஇலேசாக தேய்க்க வேண்டும்.ஹெக்டேருக்கு,5 தேனிப்பெட்டி வைப்பதால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டுவிதை பிடிப்பு அதிகரிக்கும்.  கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News