முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட்டில் துவங்க உள்ளதாக விருதுநகர் மாவட்டகலெக்டர் அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்டில் முதல்வர் கோப்பை போட்டிகள் துவங்க உள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் தடகளம், இறகுபந்து, கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம்,சது ரங்கம், கோ கோ போட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, கபடி, பொது பிரிவில் தடகளம், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்பம், அரசு ஊழியர்கள் பிரிவில் தடகளம், சதுரங்கம், கபடி, வாலிபால் போட்டிகளும், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் கடற்கரை வாலிபால், டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை, சைக்கிளிங் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. ஆக.22 முதல் செப்.12 வரை நடக்கும் இந்தமாவட்ட, மண்டல அளவில் தனி நபர், குழு போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம்,2ம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்கவிரும்பும் மாணவர்கள் https://cmtrophy.sdat.in, மூலம் முன்பதிவு செய்து பங்கேற்கலாம். ஆக.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.
0
Leave a Reply