25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சுந்தரராஜபுரம் - கோட்டையூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலிபணியிடத்திற்கு தகுதியான நபர்கள்   விண்ணபிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுந்தரராஜபுரம் - கோட்டையூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலிபணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணபிக்கலாம்.

 விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000/- என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000/- என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிட ஆசிரியர் தேர்வு வாரியம் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர். பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரிய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலருக்கும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவதுடன் இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானதாகும். தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2025-க்குள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ, விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *