25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா ராம்கோ குரூப் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்.

04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவியர்களின் கீர்த்தனாஞ்சலியும் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.

அன்று காலை 7.35 மணிக்கு ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலையில் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் திரு உருவ படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் பிரிவின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் ஜோதி ஏந்தி புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவிலில் பூஜைகள் செய்யப்பெற்று நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து காலை 11 மணியளவில் ராஜபாளையம் மில்ஸ் வந்தடைய உள்ளது.

முன்னதாக காலை 8.30 மணியளவில் ராமமந்திரத்திற்கு ஜோதி வருகின்ற சமயம் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பெற்று அனைவருக்கும் காலை 9 மணியளவில் காந்தி கலைமன்ற வளாகத்தில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. 

 

04.07.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு

இராஜபாளையம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா அரங்கத்தில்

"கலா ரத்ன", "இசைச் சுடர்"

ஸ்ரீமதி கிருதி பட்

அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அனைவரும் கேட்டு மகிழ வருக ! 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *