வெள்ளை, சிவப்பு அவலில் உள்ள சத்துக்களும், அதன் நன்மைகளும்!
அரிசி நெல்லை ஊறவைத்து தடையாக அடித்து தயாரிக்கப்படுவது அவல் ஆகும், இதற்கு போஹா (Poha, Flatted rice and red rice ) அரிசி மற்றும் சிவப்பு அரிசி என்றும் அழைக்கப்படுகின்றன.
சிவப்பு அரிசியிலிருந்து கிடைக்கக்கூடிய சிவப்பு அவல் ஏராளமான வைட்டமின் சத்துகள் உள்ளது.
வைட்டமின் ஏ, பி. சி. நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீ சியம், ஆகிய தாது சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
காலை உணவுக்கு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகவும், இதில் உள்ள நல்ல பாக்டீரியா (pro-biótic) குடலை சுத்தம் செய்து எளிதில் உண்ட உணவை செரிமானம் செய்ய உதவுகிறது உதவுகிறது.
ரத்தத்தில் உள்ள இரும்பு சத்து அதிகரிக்க செய்து , ரத்த சிவப்பு அணுக்களை (RBC) அதிகரிக்க உதவுகிறது.
சிவப்பு அவலுடன் சிறிது எலும்மிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டுவர, ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
எளிதில் செரிமானமடைவதால் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. உடம்பில் இருக்கும் Pre- Radical-களை அழிப்பதற்கு உதவும் ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளது.
குடலில் புற்று நோய் செல்கள் வளருவதை தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இதில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதால் உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தத்தின் அளவை உடம்பில் அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது
அவலை ஊறவைத்து அதனுடன் வெள்ளம், துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதன் மூலம் ரத்தத்தின் அளவை அதிகரிக்கவும் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.அவல் வயிற்று புண், வாய் புண், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.
உடல் பருமனாக காரணமான கொழுப்பு அதிகரிப்பதால் ஏற்படும் இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் குறைக்க உதவுகிறது.
0
Leave a Reply