கொத்தமல்லி, கருவேப்பிலை தழை
முட்டைகோஸை இஞ்சி யுடன் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து தயிருடன் அரைத்தால் பச்சடி நன்றாக இருக்கும்.
கொத்தமல்லி, கருவேப்பிலை தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல்இருக்கும்.
வெல்லத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி டப்பாவில் போட்டு மூடி வைத்தால் நீர்த்து போகாமல் இருக்கும்.
பயிறு வகைகள் கெடாமல் இருக்க சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
இட்லி பூ போன்று மென்மையாக வர ஒரு கைப்பிடி அவலை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து இட்லி மாவுடன் சேர்த்து அரையுங்கள் இட்லி பஞ்சு போல வரும்
மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் எலுமிச்சை தோலை சேர்த்து கழுவினால் மீன் வாடை உடனே போய்விடும்.
0
Leave a Reply