வெண்டைக்காய் ஃபிரஷ் ஆக இருக்க
உருளைக்கிழங்கை நகந்தை கொண்டு கீறினால் அதன் தோல் உறிய வேண்டும் இல்லையென்றால் அது நன்றாக விளையவில்லை என அர்த்தம்.
வீட்டில் வாங்கி வைத்திருக்கும் கேரட் பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினமாக இருக்கும்.அப்பொழுது அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது போல்'மாறிவிடும் வெட்டுவதற்கும் எளிதாக இருக்கும்.
வெள்ளைப் பூண்டில் அதன் பல் வெளியே தெரிவது போல இருக்க வேண்டும்.அது நான் நல்ல பூண்டு.
சில சமயம் வாங்கிய வெல்லத்தை தூள் செய்யவே முடியாது.சிரமமாக இருக்கும் ரொம்பவும் இறுகிப்போன வெல்லத்தை காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு சிரமம் இல்லாமல் கிடைக்கும்.
இளசாக வாங்கிய வெண்டைக்காய்களை உடனடியாக காம்பு பகுதியையும் தலைப் பகுதியையும் நறுக்கி விடவேண்டும். அதன் பின்பு ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்கு அடியில் ஒரு டிஷ்யு பேப்பரை போட்டு வெண்டைக்காய்களை அடுக்கி, மேலே ஒரு பேப்பரை போட்டு முடி பிளாஸ்டிக் டப்பாவையும் மூடி போட்டு, பிரிட்ஜில் வைத்தால் பத்து நாட்கள் வரை வெண்டைக்காய் ஃபிரஷ் ஆக இருக்கும். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் மெல்லிசான காட்டன் துணியை பயன்படுத்தலாம்.
0
Leave a Reply