முன்னாள் ஃபேஸ்புக் C.E.O.கீர்த்திகா ரெட்டி
தடைகளைத் தாண்டி இந்தியாவில் பிறந்து வளர்ந்த கீர்த்திகா ரெட்டி முன்னாள் ஃபேஸ்புக் சி ஈ ஓ..மகாராஷ்டிராவில் கல்லூரி படிப்பை முடித்தவர் கீர்த்திகா. சிறு வயதிலிருந்தே நடுத்தர வர்கத்துக்குரிய பல்வேறு தியாகங்களை செய்தே தன்னுடைய படிப்பை முடித்தார். பின்பு அமெரிக்காவில் எம் பி ஏ மற்றும் எம் எஸ் படிப்பை முடித்து, அங்கேயே ஒரு மல்டி நேஷனல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு பிரபல ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஃபேஸ்புக்கை பொறுத்தவரை இந்தியாவின் உலகளாவிய செயல்பாட்டில் கீர்த்திகாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ஒரு இந்தியராக அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதும் தங்குவதும் கீர்த்திகாவுக்கு பெரிய சவாலாக இருந்தது. எனினும் தன்னுடைய குணத்தையும் சுபாவத்தையும் எதற்காகவும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து,தன்னுடைய வேலையை மட்டும் குறிக்கோளாக வைத்து, முழு ஈடுபாட்டுடன் பணி செய்தார். இதுவே இந்தியாவிற்கான ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியாக இவரை உயர்த்தியது.முன்னாள் ஃபேஸ்புக் இந்தியாவின் சி ஈ ஓ வான கீர்த்திகா, இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவராக இருக்கிறார் .
0
Leave a Reply