ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 19வது முறையாக நம்பர் 1 இடம் பிடித்த அமெரிக்கா
பாரீஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான வாலிபால் பைனலில் அமெரிக்கா, இத்தாலி, அணிகள் மோதின ஆபாரமாக ஆடிய இத்தாலி அணி 3-0, 25-18, 25-20, 25-17, என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக தங்கம் வென்றது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரேக்டான்ஸ் போட்டி அறிமுகமானது ஆண்களுக்கான பைனலில் கனடாவின் பில் விசார்டு, பிரான்சின் டான் டேனிய மோதினர். இதில் கலக்கிய பிரேசில் பில் விசார்டு 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 22 நிமிடம் 55 வினாடியில் கடந்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், பதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்
பெண்களுக்கான கூடைப்பந்து பைனலில் அமெரிக்கா, பிரான்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் அமெரிக்க அணி 67-66, 15-9, 10-16, 20- 18, 22-23 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது.
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் 37 தங்கம், 21 வெள்ளி, 8 வெண்கலம் என 66 பதக்கம் வென்ற சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா 40 தங்கம் வென்ற போதும் 27 வெள்ளி, 24 வெண்கலம் கைப்பற்றியதால் 91 பதக்கம் 2-வது இடம் பிடித்தது. போட்டியை நடத்திய பிரான்ஸ் 5-வது இடம் பெற்றது.
0
Leave a Reply