தேவையான பொருட்கள் - தேங்காய் துருவல் - ஒரு கப் (அழுத்தி அளக்க வேண்டும்). வெல்லத்துருவல் - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,செய்முறை: வெல்லத்துருவலை கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரையவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய் சேர்த்து நன்கு கிளறுங்கள். (பாகாக ஆகும் வரை விடாமல், வெல்லக் கரைசல் கொதித்ததுமே தேங்காயைப் போடவேண்டும்). இது சுருண்டு வரும் சமயம், நெய் சேர்த்து மேலும் நன்கு கிளறி இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக உருட்டுங்கள்.கை சூடு பொறுக்கவில்லை எனில், முதலில் கைக்கு வருவது போல உருட்டிப் போட்டுவிட்டு, பிறகு அழுத்தி உருண்டை வடிவமாக உருட்டிப் போடலாம். தேங்காய், வெல்ல மணத்துடன் வெகு ஜோராக இருக்கும் இந்த கமர்கட்.
தேவையான பொருட்கள் - சப்பாத்தி 4. சர்க்கரை - (பொடித்த சப்பாத்திதூள் ஒரு கப் என்றால்) கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் -2 டீஸ்பூன்,செய்முறை: சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, அது மொறுமொறுப்பாக ஆகும் வரை, ஒரு சுத்தமான துணியால் அழுத்தி அழுத்திவிட்டு எடுங்கள். எண்ணெய் தேவையில்லை. இதை சிறிய துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடியுங்கள்.சர்க்கரையில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து, பதம் (பிசுக்கு பதம்) வந்ததும் சப்பாத்திதூள், ஏலக்காய்தூள், நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.
தேவையான பொருட்கள் - சத்துமாவு - ஒரு கப்(வீட்டிலேயே தானியங்களை வறுத்து. அரைத்துக் கொள்ளலாம். கடையிலும் வாங்கலாம்),சர்க்கரைதூள் - ஒரு கப். ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.செய்முறை: சத்துமாவு. சர்க்கரைதூள், ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சுடவைத்து. ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள். சத்தும் சுவையும் தரும் ஆரோக்கிய சிற்றுண்டி இது. குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் - தேங்காய் துருவல்ஒரு கப், ரவை ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா ஒரு டேபிள்ஸ்பூன். பொட்டுக்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், நெய் -2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து. தேங்காயை வறுத்துக்கொள்ளுங்கள். கசகசா, ரவை ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள்.பொட்டுக்கடலையையும் ரவை போலப் பொடியுங்கள். சர்க்கரை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் வைத்து, பாகுவைத்து (பிசுக்கு பதம்) இறக்கி. கலந்து வைத்ததைக் கொட்டிக் கிளறுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.
தேவையான பொருட்கள் - தேங்காய் துருவல் - ஒரு கப், பொட்டுக்கடலை அரை கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை:பொட்டுக்கடலையை பொடித்துக்கொள்ளுங்கள்(நமுத்திருந்தால் வறுத்துப் பொடியுங்கள்). தேங்காயை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையில் கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து (முன்பு சொன்ன பிசுக்கு பதம்), வறுத்த தேங்காய். பொடித்த கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.
தேவையான பொருட்கள் - முந்திரிப் பருப்பு மாவு - 1கப், மைதா மாவு - 1கப், சீனி -3 கப், தண்ணீர் - கால் கப், நெய் - 2 கப்,செய்முறை - முந்திரிப்பருப்பை லேசாக வெறுஞ்சட்டியில் சூடாக்கி பொடி பண்ணவும். தண்ணீரில் சீனி, முந்திரிப்பருப்பு மாவு போட்டு கொதிக்க விடவும். கொதித்த பின் மைதாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டும் போது சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்
தேவையான பொருட்கள் - தேங்காய் துருவல் - 1கப், முந்திரிப்பருப்பு நறுக்கியது - 1 கப், ரவை - 1கப், காய்ச்சிய பால் - 1 கப், நெய் - 1 கப், சீனி - இரண்டரை கப்.செய்முறை - வாணலியில் தேங்காய் துருவல் , முந்திரிப்பருப்பு ,ரவை, காய்ச்சிய பால்,சீனி, எல்லாவற்றையும் போட்டு கிளறவும். பர்பி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
தேவையான பொருட்கள் - தேங்காய் - 1 (இளங்காய்), ஏலக்பொடி - கால் தேக்கரண்டி, சீனி – இரண்டு கப்செய்முறை - தேங்காயை நார், தூசி, கருப்பு விழாமல் துருவி சிறிதுநேரம் ஆட்டவும். அத்துடன் ஏலப்பொடி சீனியைக் கலந்து சிறிதுநேரம் வைத்திருந்து பின் அடுப்பில் வைத்துக் கிளறவும். பர்பி பூத்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் நெய் தடவிய பலகையில் கொட்டி, மேலே ஒரு இலையால் மூடி தண்ணீரைக் தொட்டுக் கொண்டு சூடாக இருக்கும் போதே ஒரே சீராகத் தடவி விட்டு ஆறிய பின் வில்லைகளாக வெட்டவும்
தேவையான பொருட்கள் - கடலை மாவு - 1 கப், அமுல்மில்க் - 1 கப், நெய் - 2 கப், சீனி - ஒன்றரை கப், முந்திரிப்பருப்பு ,கிஸ்மிஸ் பழம், ஏலக்காய் - தேவையான அளவு.செய்முறை - வாணலியில் 1 கப் நெய் ஊற்றி மாவை சிவக்க வறுத்து, கீழே இறக்கி வைத்து அமுல் மில்க் பவுடர் சேர்த்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும். மாவுக் கலவையை சிறிது சிறிதாக தூவி கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறிக் கொண்டிருக்கும் போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து பர்பி பதம் வந்ததும் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ்பழம், ஏலம் சேர்த்து இறக்கவும்.
தேவையான பொருட்கள் - பொடி ரவை - 1 கப், பால் -4 கப், சீனி - 4 கப், ஏலக்காய் -1 தேக்கரண்டி.செய்முறை - ரவையை இலேசாக வறுத்துக் கொண்டு பிறகு மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் அதனுடன் சேர்த்து மைசூர் பாகு பதத்தில் கிளறி இறக்கி,நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி வில்லைகள் போடவும்.