எறும்புகள் வட்டமடிப்பது ஏன்?
எறும்பு இறையை தேடி செல்லும் போது வரிசையாகவே செல்லும். இதற்கு அவை வெளிப்படுத்தும்'பிரமோன்' வேதிப்பொருளே காரணம். இதன் வாசனையை வைத்தே இவை ஒன்றன் பின் ஒன்றாக செல்கிறது. இச்சமயத்தில் சில நேரம் முன்னால் செல்லும் எறும்பு வெளியேற்றும்'பிரமோன்' வேதிப்பொருள் வாசனை பின்னால் வரும் எறும்பை ஒழுங்காக சென்றடையவில்லை எனில், அவை தடம் மாறி ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருக்கும். இதைத்தொடர்ந்து வரும் எறும்புகளும் அந்த இடத்தை சுற்ற ஆரம்பித்து இறுதியில் அவை அனைத்தும் இறந்துவிடும். இந்நிகழ்விற்கு 'ஆன்ட் மில்' என பெயர்.
0
Leave a Reply