சைனா பர்பி
தேவையான பொருட்கள் - கடலை மாவு - 1 கப், அமுல்மில்க் - 1 கப், நெய் - 2 கப், சீனி - ஒன்றரை கப், முந்திரிப்பருப்பு ,கிஸ்மிஸ் பழம், ஏலக்காய் - தேவையான அளவு.
செய்முறை - வாணலியில் 1 கப் நெய் ஊற்றி மாவை சிவக்க வறுத்து, கீழே இறக்கி வைத்து அமுல் மில்க் பவுடர் சேர்த்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும். மாவுக் கலவையை சிறிது சிறிதாக தூவி கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறிக் கொண்டிருக்கும் போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து பர்பி பதம் வந்ததும் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ்பழம், ஏலம் சேர்த்து இறக்கவும்.
0
Leave a Reply