தேவையான பொருட்கள் : புதினா (ஆய்ந்தது) கால் கப், இஞ்சி ஓர் அங்குலத் துண்டு (10 கிராம்), மோர் - 3 கப், கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்பசெய்முறை: இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். பிறகு கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து, பாத்திரத்தில் உள்ள புதினா - மோர் கலவையில் சேர்க்கவும்.மோர் கலவையை அடுப்பில் வைக்க வேண்டாம்.
தேவையான பொருட்கள் : நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித்தண்ணீர் - 2 கப், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப. -செய்முறை: தனியா, இஞ்சித் துருவல், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் எண்ணெயில் வதக்கி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
தேவையான பொருட்கள்:முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடியளவுமல்லிவிதைகள் – 2 ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்மிளகு – ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்பூண்டு – 3 பல்தக்காளி – 1புளி – நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவையான அளவுதாளிக்க தேவையான பொருட்கள்எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – கால் ஸ்பூன்உளுந்து – கால் ஸ்பூன்வரமிளகாய் – 1கறிவேப்பிலை – ஒரு கொத்துபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைசெய்முறை:கடாயில் எண்ணெய் சேர்த்து முடக்கத்தான் கீரையை வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிடவேண்டும்.ஒரு மிக்ஸி அல்லது உரலில் வரமல்லி, சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.தக்காளியையும் கைகளால் கரைத்தோ அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்தோ வைத்துக்கொள்ள வேண்டும்.பூண்டையும் தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். இவையனைத்தையும் கொதிக்கும் இலைகளுடன் சேர்க்கவேண்டும். அடுத்து புளிக்கரைசல் சேர்த்து அடுப்பை குறைத்துவிடவேண்டும்.இந்த கலவை நன்றாக கொதித்தவுடன், மற்றொரு கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உடைத்த வரமிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.முடக்கத்தான் கீரை ரசம் தயார்
தேவையானவை: அவல் - ஒரு கப் , பொட்டுக்கடலை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பால் - 3 கப், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். அடி கனமான கடாயில் பால் ஊற்றி நன்றாக காய்ச்சவும். பிறகு தீயைக் குறைத்து, பொடித்த அவல் - பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இறக்கும் சமயத்தில் துருவிய வெல்லம் சேர்த்துக் கலந்து இறக்கவும். வயதானவர் முதல் குழந்தைகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் கஞ்சியைத் தரலாம்.குறிப்பு: சிவப்பு அவல் கூட பயன்படுத்தலாம். அவலில் மண் இருக்கும் என்பதால் நன்கு சுத்தம் செய்து உபயோகிக்கவும்.
தேவையானவை: புழுங்கலரிசி ஒரு கப், பால் - 2 கப், நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று (மசிக்கவும்), பொடியாக நறுக்கிய ஆப்பிள் -கால் கப்செய்முறை: புழுங்கல் அரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பால், நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கரைத்து, குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் இறக்கி, மசித்த வாழைப்பழம், நறுக்கிய ஆப்பிள் கலந்து பரிமாறவும்.குறிப்பு: சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால், புழுங்கல் அரிசியை மாவு மாதிரி நைஸாக அரைத்துக்கொள்ளலாம்.
தேவையானவை: பீட்ரூட் - கால் கப் (சிறு சதுரமாக வெட்டவும்), சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), தக்காளிச் சாறு - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கோதுமை கஞ்சி மாவு 4 - டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. கோதுமை கஞ்சி மாவு செய்ய: முழு சம்பா கோதுமை - கால் கிலோ, எள் - 50 கிராம், பொட்டுக்கடலை 150 கிராம் (கோதுமை, எள்ளை - வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு, நீண்ட நாள் பயன்படுத்தலாம்.செய்முறை: சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும். 4 டேபிள்ஸ்பூன் கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி, வெந்த பீட்ரூட் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.
தேவையானவை: கேழ்வரகு மாவு ஒரு கப், கம்பு மாவு - - அரை கப், அரிசி நொய் அரை கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், கடைந்த தயிர் - அரை கப், உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும். மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும். அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - 25 கிராம், தயிர் - ஒரு கப் (கடைந்தது), உப்பு - தேவையான அளவு,செய்முறை: புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் அடித்து ரவை போல உடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டால் நன்றாக குழைந்து வெந்துவிடும். பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.
தேவையானவை: நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர்-ஒரு கப், காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது), பால் ஒரு கப் , மிளகுத்தூள் - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று,பூண்டு - 5 பல், நெய் அல்லது வெண்ணெய் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப. - செய்முறை: காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள்தூவிக்கொள்ளலாம்.
தேவையானவை: வெண்டைக்காய் - 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி,பெரிய வெங்காயம் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, காராபூந்தி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு நீர் - 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்), சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: வெண்டைக்காயைநறுக்கி, வெறும் கடாயில் வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்). வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, வெண்டைக்காயை சேர்க்கவும். இதனுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை தூவவும். மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.