25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சமையல்

Aug 10, 2024

ஃபிரைட் ரைஸ்

தேவையான பொருட்கள் :- பச்சரிசி அரை கிலோ, தக்காளி 300 கிராம், பச்சைப் பட்டாணி 1 கப், பெல்லாரி கால் கிலோ, பச்சை மிளகாய் 6, டால்டா 50 கிராம், ஏலக்காய் 3, கிராம்பு 4, பட்டை 4, இஞ்சி சிறுதுண்டு, பூண்டு 5 பல், உப்பு தேவையான அளவு.செய்முறை  - முதலில் அரிசியை கால்மணிநேரம், நீரில் ஊற வைத்து பின் நீரில்லாமல் வடிகட்டவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும், மிளகாயையும், நீளவாக்கில் நறுக்கவும். டால்டாவை ஊற்றி, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு சிவக்க வறுத்ததும். வெங்காயம், மிளகாய், பூண்டு, பட்டாணியைப் போட்டு வதக்க வேண்டும். பின் களைந்து வைத்துள்ள அரிசியைப் போட்டு சிறிது வதக்கி தேவையான அளவு நீர் விடவும். 1 பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு நீர் விட வேண்டும். காய்கறி வேக வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. குருமா அல்லது சாலட் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Aug 10, 2024

ரொட்டி புலவு 

 தேவையான பொருட்கள் :- ரொட்டித் துண்டுகள் 4, காரட் பட்டாணி 125 கிராம், பல்லாரி வெங்காயம் 1, தக்காளிப் பழம் 1, எலுமிச்சம் பழச் சாறு தேவையான அளவு, ஏலக்காய் 2, கறிமசாலா பட்டை 1 துண்டு சிறியது, மிளகு 8 அல்லது 10, மிளகாய்ப் பொடி கால் ஸ்பூன், அரிசி 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் 1 ஸ்பூன்.செய்முறை - ரொட்டித் துண்டுகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வதக்கிக் கொள்ளவும். அரிசியைக் களைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் பெரிய ஸ்பூன் அளவு நெய்யை விட்டு, மிளகு, ஏலக்காய், பட்டை மூன்றையும் போட்டு வெங்காயமும், போட்டு பொன் நிறமாக வந்த  பிறகு வேகைவைத்த காய்கறிகளையும், தக்காளிளையும், நறுக்கி அதில் போட்டு 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.அரிசி, உப்பு, மிளகாய்ப் பொடி, பெருஞ்சீரகத் தூள் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும், முக்கால் பதம் வெந்த பிறகு  எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு மிதமாக சூடாகும் வண்ணம் கொதிக்க வடவும், அரிசி நன்றாக வெந்த பிறகு கீழே இறக்கி வறுத்த ரொட்டித் துண்டுகளை அதில் போட்டுக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

Aug 10, 2024

காளான் புலவு

தேவையான பொருட்கள் :- காளான், 125 கிராம், வெங்காயம் 100 கிராம், இஞ்சி சிறுதுண்டு, முந்திரிப்பருப்பு 25 கிராம், பிரியாணி அரிசி கால் கிலோ, நல்லெண்ணெய் 100 கிராம், புதினா சிறிதளவு, பட்டை, கிராம்பு ஏலம் 2 கிராம்.செய்முறை -  காளானைச் சுத்தம் செய்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும், முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, இஞ்சி வெங்காயம், புதினா போட்டு சிவக்க வறுத்த பின் பிரியாணி அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி 3 கப், தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். அரிசி வெந்து உதிரி உதிரியாக இருக்கும் சமயம் காளானைச் சேர்த்து மெதுவாகக் கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியை அதில் போட்டு காளான் புலவைப் பரிமாறவும்.  

Aug 03, 2024

வாழைப்பூ சட்னி

தேவையான பொருட்கள்: வாழைப்பூ- 1 கைப்பிடி,பச்சை மிளகாய் 2,பொட்டுக்கடலை,தேங்காய் துருவல், இஞ்சி  சிறிதளவு,உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு,செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும், சுத்தம் செய்த வாழைப்பூ, துண்டாக்கிய பச்சை மிளகாய், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சியை வறுக்கவும். ஆறியதும், பொட்டுக்கடலை, தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும்.சுவை மிக்க, 'வாழைப்பூ சட்னி' தயார். சத்துக்கள் நிறைந்தது. தோசை, இட்லியுடன் பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

Aug 03, 2024

பீர்க்கங்காய் தோல் சட்னி

  தேவையான பொருட்கள்  பிஞ்சு பீர்க்கங்காய் தோல் (பொடியாக நறுக்கியது) 1 கப், தேங்காய்த் துருவல் கால்கப், மல்லித்தழை 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கடுகு 1 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, புளி சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு. செய்முறை:வாணலியில் எண்ணெயைக்  காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு பீர்க்கைத் தோலைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாடை நீங்கியதும் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். கடைசியாக மல்லித்தழை, புளி, உப்பு சேர்த்து  கிளறி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். குழிப் பணியாரம், சாதம், இட்லி, தோசைகளுக்கு ஏற்றது  பீர்க்கங்காய் தோல் சட்னி. 

Aug 03, 2024

காய்கறி சட்னி 

 தேவையான பொருட்கள் -   கேரட் 1, பீன்ஸ் 6, நடுத்தர அளவு கத்தரிக்காய் 3, கோஸ் 1 துண்டு, சௌசௌ 1 துண்டு, சிறிய முள்ளங்கி 1, பிஞ்சான பச்சை மொச்சைக்கொட்டை கால் கப், அவரை 5, பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி 1 துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் 6, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. செய்முறை:  - வெங்காயம், தக்காளி, காய்கறிகளைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் காய்கறிகள், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான - தீயில் காய்கள் வேகும்வரை வதக்குங்கள். வதங்கியதும் தேங்காய், பெருங்காயம், புளி, உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.   

Aug 03, 2024

எள் சட்னி

தேவையான பொருட்கள்  கறுப்பு எள் 1 கப் உளுந்து 3 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன், புளி 1 துண்டு, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் (மிதமான தீயில்) மொறுமொறுப்பாகப் பொரித்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றல், உளுந்து ஆகியவற்றை வறுத்து, பிறகு தேங்காயைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் இதனுடன் புளி, உப்பு, வறுத்த எள் ஆகியவற்றைச் சேர்த்துக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.உளுந்து சாதத்துக்கு சூப்பர் ஜோடி எள் சட்னி

Aug 03, 2024

சேனை சட்னி 

தேவையான பொருட்கள் - சேனைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய் வற்றல் 10, உளுந்து 2 டேபிள் ஸ்பூன், புளி சிறு எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன். உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மிளகாய், பெருங்காயத்தூள், உளுந்து ஆகியவற்றை வாசனை வரும்வரை வறுத்தெடுத்து வையுங்கள். பிறகு சேனைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து கரகரப்பாக வறுத்தெடுங்கள். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.  சேனை சட்னிக்கும் சாதத்துக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருக்கும்.    

Aug 03, 2024

முட்டைக்கோஸ் சட்னி 

தேவையான பொருட்கள் -  முட்டைக் கோஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 3, புளி சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், பெருங்காயம் எண்ணெய்அரை டீஸ்பூன்,உப்பு தேவைக்கு, 2 டேபிள் ஸ்பூன் செய்முறை:கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு. உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ் சேர்த்து வதக்குங்கள். கோஸ் பச்சை வாடை போக வதங்கியதும் தேங்காய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைசாக அரைத்தெடுங்கள்.கோஸ் சட்னி இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்.

Jul 27, 2024

சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் தக்காளி – 3பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம் – 10பூண்டு – 8 பல் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்சாம்பார் பொடி  – 2 ஸ்பூன்வடித்த சாதம் – ஒரு கப்கறிவேப்பிலை – ஒரு கொத்துமல்லித்தழை – 2 கொத்துஉப்பு – தேவையான அளவுதாளிக்க தேவையான பொருட்கள்எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – கால் ஸ்பூன்உளுந்து – கால் ஸ்பூன்செய்முறை-சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகிய அனைத்தையும் உரலில் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பல்ஸ் மோடில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, அதில் தக்காளியை கைகளால் இதனுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும்.அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து தாளிக்க வேண்டும். பின்னர் கைகளால் பிசைந்து வைத்துள்ள இந்த கலவையை அடுப்பில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவேண்டும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் சாதத்தில் சுவை இருக்காது. தண்ணீரும் தெளித்துதான் விடவேண்டும். ஊற்றக்கூடாது.எண்ணெய்பிரிந்து வரும் பதத்தில்,அதில் வடித்த சாதத்தைசேர்த்து கிளறவேண்டும்., சுவையானதக்காளி சாதம் நிமிடத்தில் தயாராகிவிடும்.வாழைக்காய் வறுவல், CHIPS சைட்டிஷ் வைத்து சாப்பிடலாம்.சாம்பார்பொடிக்கு பதில், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.பச்சைமிளகாய்உங்கள்காரஅளவுக்குஏற்பசேர்த்துக்கொள்ளலாம்.தாளிக்கும்போதுதேவைப்பட்டால்முழுவரமிளகாயையும்சேர்த்துக்கொள்ளலாம்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 23 24

AD's



More News