தேவையான பொருட்கள் -மைதா 2 கப்,சர்க்கரை 1 கப்,பால் 1/2 கப்,தேவையான அளவு - மாம்பழ ஜூஸ்,செய்முறை -நன்றாகச் சலித்த 2 கப் மைதா மாவில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.நன்றாக கலந்த பின்னர் சிறிது சிறிதாக அந்த கலவையில் பாலை ஊற்றி, தோசை மாவு பதத்தில் கொண்டு வரவும்.அந்தக் கலவையில் மாம்பழ ஜூஸ் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.மாவு தயாரான பின்பு ஒரு தோசைக்கல்லை காயவைத்து குழி கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போடவும்.முட்டையில்லாத மாம்பழ பான் கேக் தயார்.
தேவையான பொருட்கள்- 5 பலாப்பழ துண்டுகள்,1 கப்மைதா மாவு,1 கப்பால்,5 ஸ்பூன் சர்க்கரை,1ஸ்பூன் பேக்கிங் பவுடர்,1ஏலக்காய்,1 சிட்டிகை உப்பு,வெண்ணெய் அல்லது நெய்.செய்முறை -பலாப்பழம், பால், ஏலக்காய் ஆகியவற்றை அரைக்கவும்.மைதாமாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை கலக்கவும்.அரைத்த பலாப்பழ பேஸ்ட் மற்றும் மைதா கலவையை கலக்கவும்.10 நிமிடங்கள் கலவையை ஊறவைக்கவும். பான் இல் நெய் சேர்த்து கலவையை ஊற்றி, 2 பக்கங்களை சமைத்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :1கப் மீல் மேக்கர்அரைக்க:1பெரிய வெங்காயம்,2தக்காளி,1டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்,காரதிற்கேற்ப,2ஸ்பூன் மல்லிதூள் ,15 புதினா இலைகள்,1டேபிள்ஸ்பூன் அளவு மல்லி இலை,1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்,1துண்டு இஞ்சி,8சிறிய பூண்டு பற்கள்,2துண்டு பட்டை,1ஏலக்காய்,3கிராம்புதாளிக்க:3ஸ்பூன் எண்ணெய்,1/2ஸ்பூன் சீரகம்,கடைசியாக சேர்க்க:1ஸ்பூன் கஸ்தூரி மெதி, சிறிதளவு மல்லிதழை.செய்முறை : தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில்,தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் மீல் மேக்கர் சேர்த்துமூடி போட்டு 15நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.மிக்சி ஜாரில் அரைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து சூடானதும்,எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து,அரைத்த விழுதுசேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின் ஊறிய மீல்மேக்கர்-ல் நன்கு தண்ணீர் பிழிந்து சேர்க்கவும்.கொதித்ததும்,மூடி போட்டு மீல் மேக்கர் வேகவைக்கவும்.இதனுடன் கஸ்தூரி மேதி,மல்லி தழை சேர்த்து கலந்து விட்டு மீண்டும் மூடி வைக்கவும்.இவையிரண்டும் தான் கிரேவிக்கு சுவை கூட்டும். நன்கு கொதித்து, தேவையான கிரேவி பதம்வந்ததும்,மல்லித்தழை தூவி பரிமாறலாம்.சிம்பிளான, மீல் மேக்கர் கிரேவி ரெடி.இது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம்.
.தேவையான பொருட்கள் : 50 கிராம்மீல்மேக்கர்,சீரகம், ஒரு ஸ்பூன்சோம்பு,சிறிதளவு கருவேப்பிலை,வர மிளகாய்,1பெரிய வெங்காயம்,1பெரிய தக்காளி,சிறிதளவுஉப்பு,1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்,1ஸ்பூன்மல்லித்தூள்,1/2 ஸ்பூன்மிளகாய் தூள்,1 ஸ்பூன்கரம் மசாலா தூள்,1 ஸ்பூன்மிளகு தூள்,1 ஸ்பூன்தேங்காய் துருவல்,தேவையான அளவு எண்ணெய்.செய்முறை- ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கர் சூடான தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஊறியதும் நன்றாக பிழிந்து வைத்து கொள்ளவும்.கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், சோம்பு, கருவேப்பிலை ,வர மிளகாய் சேர்த்துவதக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.பின்பு மஞ்சள் தூள், வர மல்லி தூள், மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள் ,சோயா சேர்த்துகலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேக விடவும்.வெந்ததும் 1 ஸ்பூன் மிளகு தூள், 2 ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துகலந்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது சுவையான மீல் மேக்கர் மிளகு வறுவல் தயார்.
தேவையான பொருட்கள்-2 ஆழாக்கு பிரியாணி அரிசி,100 கிராம் மீல்மேக்கர்,2 பெரிய வெங்காயம்,2 தக்காளி,1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2 துண்டு பட்டை,1டீஸ்பூன் சோம்பு,1/2 டீஸ்பூன் கரம் மசாலா,1 டீஸ்பூன்தனி மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் தனியாத் தூள்,சிறிதளவு புதினா இலை,சிறிதளவுகிராம்பு ஏலக்காய்,தேவையான அளவு எண்ணெய்,சிறிதளவு கொத்தமல்லி,தேவையான அளவு உப்பு.செய்முறை :-ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பீல் மேக்கர்3 நிமிடங்கள் வேக வைத்துபிழிந்து எடுத்துக் கொள்ளவும்.பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள்ஊறவிடவும்.ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை,கிராம்புஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து வெங்காயம் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.இதனுடன் மீல்மேக்கரை நன்கு பிழிந்து அதனுடன் சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் கரம்மசாலா தூள் தேவையான அளவு உப்பு கொத்தமல்லி புதினா மற்றும் ஊற வைத்த அரிசியைமட்டும் சேர்த்து கிளறி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மூன்று ஆழாக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு குக்கரில் ஊற்றிமூடி வைத்து வெயிட் போட்டு குறைவான தீயில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால்சுவையான மீல்மேக்கர் பிரியாணி தயார்.மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு,1 வெங்காயம்,2தக்காளி,ஒரு கப்மீல் மேக்கர்,ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்,1பட்டை,2கிராம்பு,ஒரு கொத்துகறிவேப்பிலை,4 ஸ்பூன்தேங்காய் விழுது4 டீஸ்பூன் எண்ணெய்,4 டீஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்,கைப்பிடி அளவுகொத்தமல்லி தழை .செய்முறை: மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த தண்ணீரை அதன் மேல் ஊற்றிநன்றாக பிழிந்து கொள்ளவும்வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயை அரைத்துவிழுதாக எடுத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு மீல் மேக்கர் சேர்த்து ஐந்து நிமிடங்கள்கொதிக்க வைக்கவும்.தேங்காய் விழுது சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவவும். இந்த குருமாசப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
தேவையான பொருட்கள்2கப்சோயா (Meal maker) ,2டேபிள் ஸ்பூன் கடலை மாவு,2டேபிள் ஸ்பூன் மைதா,2டேபிள் ஸ்பூன் அரிசி மாவு1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்,1டீஸ்பூன் தனியாதூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் எலுமிச்சை சாறு,தேவையான அளவு உப்பு,தேவையான அளவுபொரிக்க எண்ணெய்.செய்முறை :சோயா உருண்டைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.பின்னர் குளிர்ந்த நீரில்போட்டு எடுத்து நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.ஒரு பௌலில் மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.பின்னர் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் தயாராக வைத்துள்ள சோயா உருண்டைகளை சேர்த்து,கூடவே கொஞ்சம்கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா கலந்து வைத்துள்ளசோயா உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துஎடுத்தால் சோயா 65 தயார்.தயாரான சோயா 65 எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.இந்த சோயா 65 மிகவும் சுவையாகவும், கிரிஸ்பியாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :100 கிராம் மீல் மேக்கர்,கால் கப் பொரிகடலை,சிறியதுண்டு இஞ்சி,3பச்சை மிளகாய், சிறிதளவு பட்டை, கிராம்பு.லவங்கம்,ஒரு டீஸ்பூன்சோம்பு, 1 பெரிய வெங்காயம்,கருவேப்பிலை, கொத்தமல்லி,தேவைக்கேற்ப உப்பு,பொறிப்பதற்கு கடலை எண்ணெய்,5 பல்பூண்டு,ஒரு டீஸ்பூன்கான்பிளவர் மாவு.செய்முறை :மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸி ஜாரில் மீல்மேக்கரை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.பின்னர் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை,லவங்கம், கிராம்பு, சோம்புசேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். விழுதை மீல்மேகரில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு டீஸ்பூன் கான்பிளார் மாவு சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் இக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு சிறுஉருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன்பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு உருண்டைகளை போட்டுமிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.சுவையான சோயா வெஜ் கோலா ரெடி. டொமேட்டோ சாஸ் கெட்சப் போன்றவற்றுடன்சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:பலா விதை - 500 கிராம்சர்க்கரை - 200 கிராம்நெய் - 4 மேஜைகரண்டிகேசரி பவுடர்,முந்திரி, திராட்சை,தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பலா விதைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்.வாணலியில் நெய் சூடானதும் மசித்த பலாவிதைகளை போட்டு வதக்கவும். பின் சர்க்கரை,கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும். அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்த முந்திரி,திராட்சை, நெய் கலந்து இறக்கவும்.சுவைமிக்க, 'பலா விதை அல்வா!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர். மாலைநேரத்தில் பரிமாற ஏற்றது.
தேவையான பொருட்கள்:மாம்பழக் கூழ்: 1 கப் (நாரில்லாத பழுத்த மாம்பழம்),சோள மாவு (Corn Flour): 1/2 கப்,சர்க்கரை: 1/2 முதல் 3/4 கப் (மாம்பழத்தின் இனிப்பிற்கு ஏற்ப),நெய்: 1/4 கப்,தண்ணீர்: 1 கப்,முந்திரி மற்றும் பாதாம்: தேவையான அளவு,ஏலக்காய் தூள்: 1/2 டீஸ்பூன்,செய்முறை-மாம்பழத்தின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் தண்ணீர் எதுவும்சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்குகரைத்து தனியாக வைக்கவும்.ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் பாதாம் பருப்பை வறுத்துதனியாக எடுத்து வைக்கவும்.அதே கடாயில் அரைத்து வைத்துள்ள மாம்பழக் கூழைச் சேர்த்துமிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கவும்.பிறகு, கரைத்து வைத்துள்ள சோள மாவு தண்ணீரை மாம்பழக் கூழுடன் சேர்த்து மிதமானதீயில் தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியாகத் தொடங்கும். இந்த நிலையில் சர்க்கரைமற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். சர்க்கரை உருகி அல்வா பளபளப்பாக மாறும்.மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக அல்வாவில் சேர்த்து, அது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டுவரும் வரை கிளறவும். இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்பைச் சேர்த்துக் கிளறிஇறக்கவும்.சுவையான, நாவில் கரையும் மாம்பழ அல்வா தயார்.மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.