25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


சமையல்

Jan 03, 2026

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் உருண்டை.

தேவையான பொருட்கள்:எள் -ஒரு கப், வெல்லம்- ஒன்றரை கப்,பொட்டுக்கடலை, வேர்க்கடலை- தலா ஒரதேக்கரண்டிசெய்முறை:எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் சிறிது வறுக்கவும். பிறகு. அத்துடன் பொரி உருண்டைக்கு பாகு வைத்தது போலவே பாகு எடுத்து அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை மூன்றையும் கலந்து உருண்டை பிடிக்கவும்.எள் படபடவென்று பொரிந்தவுடனே கீழே இறக்கி, ஒரு தட்டில் கொட்டிவிட்டால் தீய்ந்துப் போவதை தடுக்கலாம்.

Jan 03, 2026

.பாசிப்பருப்புஉருண்டை.

தேவையான பொருட்கள் :1/4 கிலோ பாசிப்பருப்பு1/4 கிலோ சீனி  10 முந்திரிபருப்பு150 மி.லி நெய் செய்முறை பாசிப்பருப்பை வறுத்து மாவு மில்லில் குடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.சீனியை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்காடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின் அதே கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கவும், பாசிப்பருப்பு மாவையும், சீனி மாவையும் சேர்த்துக்கொள்ளவும்.அந்த மாவில் வறுத்த முந்திரியையும், சூடான நெய்யையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும், இப்போது சுவையான, சத்தான பாசிப்பருப்பு உருண்டை .

Dec 27, 2025

தினை புட்டு

தேவையான பொருட்கள் :-1கப் தினை புட்டு மாவு,1/4 கப் துருவிய தேங்காய்,2 சிட்டிகை உப்பு,தேவையானஅளவு வெந்நீர்.செய்முறை :-தினை புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .இதில் வெண்ணெய் சேர்த்து ஈரப்பதம்பருவம் வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.புட்டுக் குழாயில் துருவிய தேங்காய் கொஞ்சம் போட்டு ,அதற்கு மேல் புட்டு மாவை சேர்க்கவும்.அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவியது ,இவ்வாறு மாற்றி குழாய் நிரம்பும் வரை சேர்க்கவும்.இதனை மூடி போட்டு சூடான புட்டுக் குழாயில் வைத்து, நன்கு ஆவி வரும் வரை வேகவிட்டுஎடுக்கவும்.இது ஆரோக்கியமான திணை புட்டுடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடசுவையாக இருக்கும்.

Dec 27, 2025

கோதுமை புட்டு

தேவையான பொருட்கள் :1 கப்கோதுமை மாவு,1/2 கப் தேங்காய்,1/4 கப் நாட்டு சர்க்கரை,1 ஸ்பூன் நெய்,2ஏலக்காய்,சிறிது உப்பு ,செய்முறை :கோதுமையை வறுத்து அரைத்து கொள்ளவும் வறுத்த மாவுடன் உப்பு,தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த மாவில்சர்க்கரை,தேங்காய், நெய்,ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

Dec 27, 2025

பாசிப்பருப்பு புட்டு.

தேவையான பொருட்கள் :200 கிராம் பாசிப்பருப்பு,5 டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரிப் பருப்பு,1/2 மூடி துருவிய தேங்காய்,100 கிராம் சக்கரை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்.செய்முறை :முதலில் 200 கிராம் பாசிப்பருப்பை நாம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும்.மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் முழுவதையும் நன்றாக வடித்து விட்டு வெறும் பருப்பைமட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நாம் இட்லி ஊற்றுவது போல் இட்லி சட்டியில் அரைத்த பாசிப்பருப்பு மாவை இட்லி போல்வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இட்லி வெந்ததும் அதனை தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக்கொள்ள வேண்டும். இட்லி ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் வைத்து இட்லி துண்டுகளை தூளாகஉதிர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்புகளைஉடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காய் நெய்யில் நன்றாக வதங்கும் வரைவதக்க வேண்டும்.பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு இட்லி துருவலை அதனுடன் சேர்த்து நன்றாககலக்கி பிறகு அதனுடன் 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.இனிப்பை இன்னும் தூக்கி கொடுப்பதற்காக ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஒரு 5 நிமிடம் வரை சிம்மில் அடுப்பை வைத்து கிளறி விட வேண்டும்.மிகவும் ருசியானஆரோக்கியமான சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பாசிப்பருப்பு புட்டு தயார்.புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

Dec 27, 2025

சிவப்பரிசி குழல் புட்டு

தேவையான பொருட்கள் :சிவப்பரிசி - 2கப், தேங்காய் துருவல்- 1 1/2 கப், உப்புதேவைக்கு. செய்முறை :ஒரு பாத்திரத்தில் புட்டு மாவு, அத்துடன் தேவையான உப்பு, சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகதண்ணி தெளித்து கட்டி இல்லாமல் மாவு உதிரியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்துவிடவும்.தேங்காயை துருவி வைத்துக்கவும். புட்டு பானையை ஸ்டவ்வில் வைத்து தண்ணி விட்டு சூடுபண்ணவும்.புட்டு குழலில் கொஞ்சம் தேங்காய் துருவல், அதற்க்கு மேல் அரிசி மாவு, என்று குழாய்முழுவதுமாக நிறைத்து புட்டு பானையில் 10நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான சிவப்பாரிசி குழாய் புட்டு தயார்..இந்த சுவைமிக்க புட்டை கடலை,பச்சை பயறு, தட்டை பயறு குருமாவுடன் பரிமாறவும்.இது ஒரு அருமையான காலைஉணவு.குழந்தைகள் சக்கரை, பழம் சேர்த்தும் சாப்பிடலாம்.

Dec 27, 2025

சத்துமாவு புட்டு.

தேவையான பொருட்கள்1 கப் சத்துமாவு,4 ஸ்பூன் தேங்காய் துருவல்,2 ஸ்பூன் சர்க்கரை,1/2 ஸ்பூன் உப்பு,வாழைப்பழம் தேவைக்கேற்ப,1/4ஸ்பூன் ஏலக்காய் தூள்.செய்முறை :முதலில் சத்துமாவை கடாயில் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.தேவையான அளவு உப்புசேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.கையில் பிடித்தால் கொழுக்கட்டை பதத்திற்கும் உதிர்த்து விட்டால் தூளாகும் அளவுக்கு இருக்கவேண்டும்.இப்பொழுது இதை ஒரு இட்லி தட்டில் துணி போட்டு அதன் மேல் புட்டு மாவை சேர்த்து 5 நிமிடம்ஆவியில் வேக வைக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து வெந்தவுடன் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் சர்க்கரை தேங்காய்துருவல் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால் புட்டு ரெடி.அப்படியே பரிமாறலாம்.அல்லது 1 ஸ்பூன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம்.அல்லது 1 வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம்.குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு புட்டு தயார்.

Dec 27, 2025

வெண்ணெய் புட்டு.

தேவையான பொருட்கள்:புழுங்கல் அரிசி - 1 கப்,வெல்லம் - 1 கப்,பால்  - 200. மி. லி, கடலைப்பருப்பு,தேங்காய் துருவல் - தலா கால் கப்,ஏலக்காய்துாள் - சிறதளவு ,வெண்ணெய்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:புழுங்கல் அரிசியை ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில்வேக வைக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் பால் ஊற்றிகொதித்ததும், அரைத்தமாவைசேர்த்துகிளறவும்.பின்,வெந்தகடலைப்பருப்பு, உப்பு, தேங்காய்துருவல் மற்றும் ஏலக்காய்துாள் துாவி கிளறி இறக்கவும். பெரிய தட்டில் வெண்ணெய் தடவி,கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவைமிக்க, 'வெண்ணெய் புட்டு!' தயார்.அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Dec 20, 2025

சோள இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:சோள மாவு - 2 கப்எண்ணெய் - 4 தேக்கரண்டிஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சோள மாவுடன் உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசையவும். அதை இடியாப்ப குழலில் பிழிந்து,15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.சுவையான,'சோள இடியாப்பம்!' தயார். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். இனிப்பு பிரியர்கள் தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை சேர்த்து உண்ணலாம். சுவை அபாரமாக இருக்கும்.

Dec 20, 2025

கவுனி அரிசி இடியாப்பம் .

தேவையான பொருட்கள்: கவுனி அரிசிமாவு  (அல்லது ஊறவைத்த கவுனி அரிசி) - 1 கப்,தண்ணீர் - தேவையான அளவு (மாவு பிசைய),உப்பு - தேவையான அளவு,நெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),தேங்காய் துருவல் - சிறிதளவு (விருப்பப்பட்டால்) ,செய்முறை:கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, நிழலில் உலர்த்தி மாவாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவை எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கொதிக்கும் வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கெட்டியாக பிசையவும்(சப்பாத்தி மாவை விட சற்று மென்மையாக). நெய் சேர்த்து பிசைந்தால் மென்மையாக இருக்கும்.இடியாப்ப அச்சில் பிழிந்து, இட்லி தட்டில் வைத்து ஆவியில்5-7 நிமிடங்கள் வேகவைக்கவும்.சுவையான கவுனி அரிசி இடியாப்பத்தை தேங்காய் பால், நாட்டுச் சர்க்கரை அல்லது குருமாவுடன் சேர்த்து பரிமாறவும். இது ஆரோக்கியமான, சத்தான காலை அல்லது இரவு உணவு. 

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 73 74

AD's



More News