சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 8 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
வடித்த சாதம் – ஒரு கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
செய்முறை-சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகிய அனைத்தையும் உரலில் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பல்ஸ் மோடில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, அதில் தக்காளியை கைகளால் இதனுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து தாளிக்க வேண்டும். பின்னர் கைகளால் பிசைந்து வைத்துள்ள இந்த கலவையை அடுப்பில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் சாதத்தில் சுவை இருக்காது. தண்ணீரும் தெளித்துதான் விடவேண்டும். ஊற்றக்கூடாது.எண்ணெய்பிரிந்து வரும் பதத்தில்,அதில் வடித்த சாதத்தைசேர்த்து கிளறவேண்டும்., சுவையானதக்காளி சாதம் நிமிடத்தில் தயாராகிவிடும்.வாழைக்காய் வறுவல், CHIPS சைட்டிஷ் வைத்து சாப்பிடலாம்.
சாம்பார்பொடிக்கு பதில், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
பச்சைமிளகாய்உங்கள்காரஅளவுக்குஏற்பசேர்த்துக்கொள்ளலாம்.
தாளிக்கும்போதுதேவைப்பட்டால்முழுவரமிளகாயையும்சேர்த்துக்கொள்ளலாம்.
0
Leave a Reply