எள் சட்னி
தேவையான பொருட்கள் கறுப்பு எள் 1 கப் உளுந்து 3 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன், புளி 1 துண்டு, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் (மிதமான தீயில்) மொறுமொறுப்பாகப் பொரித்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றல், உளுந்து ஆகியவற்றை வறுத்து, பிறகு தேங்காயைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் இதனுடன் புளி, உப்பு, வறுத்த எள் ஆகியவற்றைச் சேர்த்துக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.உளுந்து சாதத்துக்கு சூப்பர் ஜோடி எள் சட்னி
0
Leave a Reply