காலிஃப்ளவர் சூப்
தேவையானவை: நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர்-ஒரு கப், காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது), பால் ஒரு கப் , மிளகுத்தூள் - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று,பூண்டு - 5 பல், நெய் அல்லது வெண்ணெய் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப. -
செய்முறை: காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள்தூவிக்கொள்ளலாம்.
0
Leave a Reply