சௌ சௌ கூட்டு.
தேவையானவை:சௌ சௌ -1,வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2இஞ்சி – சிறிது,தக்காளி -1,பாசி பருப்பு - அரை கப்,உப்பு - சிறிது,கொத்தமல்லி இலை – சிறிது,தேங்காய் துருவல் -1 ஸ்பூன்கடுகு உளுந்து மற்றும் சீரகம் தாளிக்க
செய்முறை:
சௌ சௌ வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
.அதனுடன் பாசி பருப்பையும் சேர்த்து வேகவைக்கவும்.
தேங்காயுடன் பச்சைமிளகாய் இஞ்சியும் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.
தேங்காய் விழுதை காயுடன் சேர்க்கவும் நன்கு வெந்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.
கடைசியில் கொத்தமல்லியை சேர்க்கவும்.சௌ சௌ கூட்டு ரெடி.
0
Leave a Reply